தமிழண்டா என மார்தட்ட வைத்த கெத்தான சம்பவம்.. வெளிநாட்டில் தமிழன் என்றே தெரியாமல் வாழ்ந்தவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்..! Description: தமிழண்டா என மார்தட்ட வைத்த கெத்தான சம்பவம்.. வெளிநாட்டில் தமிழன் என்றே தெரியாமல் வாழ்ந்தவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்..!

தமிழண்டா என மார்தட்ட வைத்த கெத்தான சம்பவம்.. வெளிநாட்டில் தமிழன் என்றே தெரியாமல் வாழ்ந்தவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்..!


தமிழண்டா என மார்தட்ட வைத்த கெத்தான சம்பவம்.. வெளிநாட்டில் தமிழன் என்றே தெரியாமல் வாழ்ந்தவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்..!

வெளிநாட்டில் தமிழர்களை போல தோற்றத்தில் இருந்த ஒருவர், 41 ஆண்டுகளுக்கு பின்னர் தன்குடும்பத்தினரை நேரில் பார்த்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் அருகில் உள்ள அம்மாபேட்டை சின்னகடை வீதியில் வசித்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி தனலெட்சுமி. இவர்கள் குடும்பத்தின் வறுமை காரணமாக 41 ஆண்டுகளுக்கு முன்பே தன் இரு பிள்ளைகளையும் டென்மார்க்கில் உள்ள ஒரு தம்பதிக்கு தத்து கொடுத்துள்ளனர். அப்படி தத்து கொடுக்கப்பட்டவர்களில் ஒருவரான டேவிட் கில்டெண்டல் நெல்சனுக்கு இப்போது 43 வயது. இவர் தனது தாயுடன் 2 வயதில் இருக்கும் பிளாக் அண்ட் வொயிட் போட்டோவை கொண்டு கடந்த 2013ல் இருந்தே தன் அம்மாவை தேடிக் கொண்டிருந்தார்.

அதுவும் கூட தன்னை பார்க்க தமிழன் போல் இருந்ததால் தான் தன்னை வளர்த்த டென்மார்க் தம்பதிகளிடம் பேசி இந்த விபரத்தைக் கேட்டிருக்கிறார். இந்த விசயங்களை டென்மார்க் தம்பதிகள் சொல்ல, கடந்த 2017 ல் சென்னை வந்து ஏமாற்றத்தோடு கண்டுபிடிக்கமுடியாமல் திரும்பிப் போனார். தொடர்ந்து ஆக்டிவிஸ்ட்களான அஞ்சலிபவார், அருண் தோஹ்லே ஆகியோரை சந்தித்து உதவியை நாடி, மீண்டும் தேடினார்.

இவர்கள் இதுகுறித்து டாக்குமெண்ட்ரி எடுத்து ரிலீஸ் செய்ய அது ஆன சேரால் தாயை கண்டுபிடித்த டேவிட், சென்னையில் கடந்த சனிக்கிழமைதன் அம்மாவை அவரது வீட்டில் சந்தித்தார். 41 வயதில் தேடிவந்த, தன் இரண்டு வயது பாலகனுக்கு கட்டி அணைத்து முத்தமழை கொடுத்தார் அம்மா.

ஆனால் தனலெட்சுமிக்கு, டேவிட் பேசும் பாசையும், டேவிட்க்கு தனலெட்சுமிக்கு தெரிந்த தமிழும் தெரியவில்லை.ஆனாலும் இவர்களது அன்புக்கு முன்னால் மொழி ஒரு விசயமாகவே இல்லை. இதேபோல் தனலெட்சுமியின் மூத்தமகன் ராஜா, டென்மார்க்கில் மார்ட்டின் மேனுயேல் என்ற பெயரில் வாழ்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :