குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் துணியைதிணித்த தாய்.. அதன்பின் குழந்தைக்கு நடந்த சோகம்..! Description: குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் துணியைதிணித்த தாய்.. அதன்பின் குழந்தைக்கு நடந்த சோகம்..!

குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் துணியைதிணித்த தாய்.. அதன்பின் குழந்தைக்கு நடந்த சோகம்..!


குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் துணியைதிணித்த தாய்.. அதன்பின் குழந்தைக்கு நடந்த சோகம்..!

அழுகின்ற குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்சி சமாதானப்படுத்தும் பல தாய்களைப் பார்த்திருப்போம். ஆனால் தன் குழந்தையின் அழுகையை நிறுத்த ஒரு தாய் செய்த செயல் அந்த பச்சிளம் குழந்தையின் உயிரையே பறித்துவிட்டது.

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் வாலஜா திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர். இவரோட மனைவி பவித்ரா. 22 வயதாகிறது. இந்த தம்பதிக்கு ரம்யா என்ற மூன்றுவயது குழந்தையும், மவுலிகா என்ற ஒருவயது குழந்தையும் உள்ளது. இதனிடையில் பவித்ராவுக்கும், அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் பவித்ரா, தன் தாய் வீட்டில் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

மேலும் பவித்ரா, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலையும் செய்தார். நேற்றிரவு வெகுநேரம் இரண்டாவது குழந்தை மவுலிகா தூங்காமல் அழுதுகொண்டே இருந்தது. குழந்தையை பலவகைகளில் சமாதானப்படுத்தியும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக பவித்ரா, குழந்தையின் வாயில் ஒரு துணியை வைத்திருக்கிறார்.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கியது. இதனைப் பார்த்து பதட்டமடைந்த பவித்ரா, குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு போனார். அவர்கள் சோதித்து பார்த்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்கள். இந்த விசயம் வெளியில் தெரிந்ததும், உள்ளூர் வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் குழந்தையின் தாய் பவித்ராவை கைது செய்துள்ளனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :