ஆசிரியையின் அலட்சியம்... துள்ளத்துடிக்க உயிர்பிரிந்த சோகம்.. நெஞ்சை உருக்கும் வேதனைப்பதிவு...! Description: ஆசிரியையின் அலட்சியம்... துள்ளத்துடிக்க உயிர்பிரிந்த சோகம்.. நெஞ்சை உருக்கும் வேதனைப்பதிவு...!

ஆசிரியையின் அலட்சியம்... துள்ளத்துடிக்க உயிர்பிரிந்த சோகம்.. நெஞ்சை உருக்கும் வேதனைப்பதிவு...!


ஆசிரியையின் அலட்சியம்... துள்ளத்துடிக்க உயிர்பிரிந்த சோகம்.. நெஞ்சை உருக்கும் வேதனைப்பதிவு...!

பள்ளியில் ஆசிரியர்கள் தான் பெற்றோர்கள்..வீட்டில் பெற்றோர்கள் தான் ஆசிரியர்கள் என சொல்லுவார்கள். அது நூற்றுக்கு நூறு நிஜம். அந்தவகையில் பள்ளியில் ஆசிரியர்கள் சரியாக குழந்தையிடம் அன்பைக் காட்டாவிட்டால் உயிரே போய்விடும் என்னும் அதிர்ச்சி சம்பவ ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம் கேரளம். இங்குதான் பிற மாநிலங்களைவிட விழிப்புணர்வும் அதிகம். ஆனாலும், இங்கேயே ஒரு ஆசிரியையின் கவனக்குறைவால் ஒரு பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோகியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேரளத்தின் வயநாடு மாவட்டம் சுல்தான்பதேரியில் அரசுப்பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 5ம் வகுப்பில் ஸ்நேகலதா என்ற மாணவி படித்து வந்தார். நேற்று இவர் வகுப்பறையில் இருந்த போது, கிளாஸ் ரூமில் ஓட்டை வழியே பாம்பு ஒன்று வந்து மாணவியை கடித்திருக்கிறது. ஸ்னேகலதா உடனே, இதை தன் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதை டீச்சர் பொருட்படுத்தாமல் கல் தட்டியிருக்கும் எனச்சொல்லி விட்டு சிகிட்சைக்கு அனுப்பாமல் இருந்துவிட்டார். சிறிதுநேரத்தில் குழந்தையின் உடல் நீலநிறமாகி விட்டது. உடனே மாணவியின் பெற்றோருக்கு தகவல்சொல்ல, அவர் தன் பிள்ளையை தூக்கிக்கொண்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு போனார். ஆனால் அங்கு ஸ்னேகலதாவின் உடல் கடும் மோசமடைந்தது. இதனால் மாணவி இன்னொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

ஆனால் அங்கு சிகிட்சை பலனின்றி மாணவி ஸ்னேகலதா பரிதாபமாக உயிர் இழந்தர். இதனிடையில் அந்த ஆசிரியையை கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இச்சம்பவம் கேரளத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :