நடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா? வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா? Description: நடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா? வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா?

நடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா? வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா?


நடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா? வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா?

வீரபாண்டிய கட்டபொம்மனையும், வ.உ.சியையும் வெகுமக்களிடம் கொண்டு சென்றதே சிவாஜி கணேசனின் நடிப்புதான். சுதந்திரப் போராட்ட படங்கள் ஆனாலும் சரி...காதல் காவியம் ஆனாலும் சரி...செண்டிமெண்ட் படமானாலும் சரி அதில் முத்தாய்ப்பான நடிப்பை வழங்கி புருவம் உயர வைப்பவர் சிவாஜி கணேசன்.

அதனால் தான் அவரை கலைத்தாயின் மூத்தமகன் எனச் சொல்கிறார்கள். சத்ரபதி சிவாஜியாக ஒரு நாடகத்தில் நடித்த கணேசனைப் பார்த்து, தந்தை பெரியார் இவர் தான் இனி சிவாஜி என புகழ்ந்தாராம். அப்படித்தான் அவருக்கு சிவாஜி என பெயர் வந்ததாம். இப்போது சமீபத்தில் கூட சிவாஜியின் வசந்தமாளிகை ரீமேக்கில் வந்தது. வசூலிலும் அது சக்கைப்போடு போட்டது.

சிவாஜி இருந்த வீடு, இப்போது கைமாறியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. ராயப்பேட்டையில் அவர் வீடு அப்போது ரொம்ப பிரபலம். அன்றைய காலத்தில் எல்லா பிரபலங்களின் வீடும், ராயப்பேட்டையில் தான் இருந்தது. சந்திரமுகி திரைப்படமும் இங்குதான் சூட்டிங் நடந்தது. அந்த படத்துக்கு பின், படத்தயாரிப்பை நிறுத்திய சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் அது சார்ந்த சொத்துக்களையும் விற்றுவிட்டதாம்.

இந்த சூழ்நிலையில்தான், சிவாஜியின் இருந்த அந்த வீட்டை இடித்துவிட்டு புதிய பிளாட் கட்டப்போவதாக தகவல்கள் வருகிறது. இதனால் நடிகர் திலகம், நடிப்புலகின் சிகரம். செவ்வாலியே பட்டம் வென்ற சிவாஜி வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டால் அவர் வாழ்ந்த வரலாற்றுப் பொக்கிஷம் இல்லாமல் போகும் என திரையிலகப் பிரமுகர்கள் சிலர் வேதனையில் உள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :