அன்று புகழின் உச்சத்தில் இருந்த நடிகை... இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? Description: அன்று புகழின் உச்சத்தில் இருந்த நடிகை... இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

அன்று புகழின் உச்சத்தில் இருந்த நடிகை... இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?


  அன்று புகழின் உச்சத்தில் இருந்த நடிகை... இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

நடிப்புத்துறையில் கோலோச்சும் பெண்களில் பலர் இண்டஸ்ட்ரியில் தொடரவே விரும்பும் நிலையில், சொந்த பிஸ்னஸ் தொடங்கி அதிலும் வெற்றி பெற்று கோலோச்சிக் கொண்டிருக்கிறார் இந்த நடிகை.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்குப் போய், மீண்டும் யூடர்ன் அடித்து சின்னத்திரைக்கே வந்து ஜொலித்தவர் சந்தோஷி. சூப்பர் ஸ்டார் நடித்த பாபா படத்தில் அறிமுகமான இவர் சுந்தர்சியின் வீராப்பு, சத்யராஜின் மிலிட்டரி படங்களிலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் வாய்ப்பு கிடைத்தது. ஒருகட்டட்தில் சின்னத்திரைக்கு ஒதுங்கினார். அரசி, இளவரசி சீரியல்களில் கலக்கிய இவர், பீக்கில் இருந்த போதே நாடக நடிகரான ஸ்ரீதர் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். தொடர்ந்து நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு சேர்ந்து பிளஸ் என்னும் பெயரில் பொட்டிக் ஷாப் ஒன்றையும் துவங்கினார்.

இந்த பொட்டிக் மணப்பெண்களுக்கான நகைகள், உடைகளை பிரத்யேகமாக தயாரிக்கிறது. இதற்கு ஆர்டர்களும் குவிய, இப்போது சந்தோஷி அழகுக்கலை வகுப்பையும் எடுத்து வருகிறார்.

இவரது சமீபத்திய கருத்தரங்கில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அழகுப்பதுமையாக ஜொலித்தார். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையின் தாயான சந்தோஷி, இப்போது அழகான இரட்டை பெண்குழந்தைகளுக்கும் தாய் ஆகி இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :