இறந்தபின் பிரபல நடிகருக்கு தேடிவந்த விருது... ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீர் சிந்திய காட்சி... இறந்தபின் நிறைவேறிய கடைசி ஆசை...! Description: இறந்தபின் பிரபல நடிகருக்கு தேடிவந்த விருது... ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீர் சிந்திய காட்சி... இறந்தபின் நிறைவேறிய கடைசி ஆசை...!

இறந்தபின் பிரபல நடிகருக்கு தேடிவந்த விருது... ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீர் சிந்திய காட்சி... இறந்தபின் நிறைவேறிய கடைசி ஆசை...!


இறந்தபின் பிரபல நடிகருக்கு தேடிவந்த விருது... ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீர் சிந்திய காட்சி... இறந்தபின் நிறைவேறிய கடைசி ஆசை...!

சில விசயங்கள் நம் ஆழ்மனதுக்குள் மிகவும் நெகிழ்ச்சியையும், நீங்காத ரணத்தையும் ஏற்படுத்திவிடும். அப்படியான விசயங்களில் ஒன்றுதான் இது. ஆம் அண்மையில் உயிர் இழந்த தமிழ்த்திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான ராஜசேகருக்கு சிறந்த தந்தைக்கான விருதை வழங்கி இருக்கிறது ஜூ தமிழ் தொலைக்காட்சி!

அவருக்கு விருது அறிவிக்கப்பட்டதுமே அவரோடு சேர்ந்து நடித்த அனைவருமே கண்ணீரில் மூழ்கிப் போயினர். காரணம் அந்த அளவுக்கு ரணமாக இருந்துவிட்டது அவரது கடைசிகாலம். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பாலைவனச்சோலை படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குனர்கள் ராபர்ட்_ராஜசேகர் ஜோடிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. இந்த கூட்டணி அப்போதே அவ்வளவு பிரபலம். பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்த ராஜசேகர் தன் கடைசிக்காலத்தில் சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்தார். சத்தியா சீரியலில் இவரின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. இதேபோல் சரவணன் மீனாட்சி தொடரிலும் சிறந்த நடிப்பை ராஜசேகர் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் இவரின் சீரியல் பங்களிப்புக்காக சிறந்த தந்தை பாத்திரத்துக்கான விருதை ஜீ தமிழ் நிறுவனம் வழங்கியது. சின்னத்திரை விருது வழங்கும் நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வந்ததுமே அவரோடு சேர்ந்து நடித்த அனைவரும் கண்ணீரில் மூழ்கிப் போயினர்.

அப்போது தொகுப்பாளர்கள், ராஜசேகருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. வீடு கட்டி முடித்ததுமே அவர் இறந்து விட்டார். அவர் சடலமாகத்தான் முதல் முதலில் அந்த வீட்டுக்கே வந்தார் எனச்சொல்ல கூட்டம் மொத்தமும் அழுதது. ராஜசேகரின் விருதை அவர் மனைவி பெற்றுச் சென்றார்.


நண்பர்களுடன் பகிர :