உங்க தலைமுடி அடர்த்தியாக வளரணுமா? இந்த எண்ணெயை இப்படி தேய்ங்க போதும்...! Description: உங்க தலைமுடி அடர்த்தியாக வளரணுமா? இந்த எண்ணெயை இப்படி தேய்ங்க போதும்...!

உங்க தலைமுடி அடர்த்தியாக வளரணுமா? இந்த எண்ணெயை இப்படி தேய்ங்க போதும்...!


  உங்க தலைமுடி அடர்த்தியாக வளரணுமா? இந்த எண்ணெயை இப்படி தேய்ங்க போதும்...!

பலருக்கு தலைமுடி அடர்த்தியாக இல்லையே என கவலை இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு! இதோ இது அவர்களுக்கான சூப்பர் டிப்ஸ்.

கடுகு எண்ணெய் சமையலுக்கு பலரும் பயன்படுத்தும் ஒன்று. அதில் ஏராளமான உடலுக்கு நன்மை அளிக்கும் சக்திகளும் உள்ளது.

ஜலதோசத்தை போக்குவது, சருமத்துக்கு போதிய ஈரப்பதத்தை கொடுப்பது, கூந்தல் வளர்ச்சியை தூண்டுவது என பல விசயங்களையும் செய்கிறது. கடுகு எண்ணெயில் உள்ள ஆல்பா கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்பட்டு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

இன்று பலருக்கும் கூந்தல் அடர்த்தி குறைய வேர்கள் வலிமை இழப்பதுதான் காரணம். சுற்றுப்புற மாசு, மன அழுத்தம், விட்டமின் குறைபாடு ஆகியவையும் இதற்கு காரணமாகிறது. இதையெல்லாம் போக்கும் ஆற்றல் கடுகு எண்ணெய்க்கு இருக்கிறது.

இதற்கு கடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட் ஆகியவையே போதும். ஒரு பவுலில் கடுகு எண்னெயும்,போகோர்ட்ம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதை தலைமுடியில் நன்றாக அப்ளே செய்ய வேண்டும்.

தொடர்ந்து ஒரு துண்டை சூடுநீரில் நனைத்து தலையை சுற்றி அணியுங்கள். இதை 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து மெல்லிய ஷாம்பு கொண்டு அலசினால் போதும்.

இதை வாரத்துக்கு இருமுறை, என தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்து பார்த்தாலே கூந்தல் மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளரத் துவங்கும்.


நண்பர்களுடன் பகிர :