பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் குடித்த சாம்பார் அண்டா.. பெற்றோர்களே உஷார்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..! Description: பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் குடித்த சாம்பார் அண்டா.. பெற்றோர்களே உஷார்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் குடித்த சாம்பார் அண்டா.. பெற்றோர்களே உஷார்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!


பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் குடித்த சாம்பார் அண்டா.. பெற்றோர்களே உஷார்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

சிறுவன் சுர்ஜித்தின் மரணத்தால் நாடே சோகத்தில் மூழ்கிப் போய் இருக்கும் நிலையில், தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் சாம்பார் அண்டாவுக்குள் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிர் இழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், பான்யம் கிராமத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. கடந்த புதன் கிழமை பள்ளிக்கூடத்தில் வைத்து கொதிக்க, கொதிக்க இருந்த சாம்பார் அண்டாவுக்குள் புருசோத்தம் ரெட்டி என்ற 6 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

உணவுக்காக வரிசையில் நின்ற போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தான் அண்டாவுக்குள் விழுந்துள்ளான் சிறுவன்.

முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்துவிட்டு, பொதுமருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். மாவட்ட மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி சிறுவன் புருசோத்தம் ரெட்டி பரிதாபமாக உயிர் இழந்தான்.

பள்ளிக்கூடத்தில் அலட்சியத்தால் தான் சிறுவன் உயிர் இழந்ததாக, அவனது குடும்பத்தினர் போராட்டம் நடத்டினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :