என் வாழ்வை மாற்றியதே இளையதளபதி விஜய்தான்... ரகசியம் உடைத்த மூக்குத்தி முருகன்..! Description: என் வாழ்வை மாற்றியதே இளையதளபதி விஜய்தான்... ரகசியம் உடைத்த மூக்குத்தி முருகன்..!

என் வாழ்வை மாற்றியதே இளையதளபதி விஜய்தான்... ரகசியம் உடைத்த மூக்குத்தி முருகன்..!


என் வாழ்வை மாற்றியதே இளையதளபதி விஜய்தான்... ரகசியம் உடைத்த மூக்குத்தி முருகன்..!

விஜய் தொலைக்காட்சியின் சூப்ப்ர் சிங்கர் நிகழ்ச்சியில் வாகை சூடி தமிழகம் மட்டுமல்ல...உலகெங்கும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருக்கிறார் மூக்குத்தி முருகன்.

கோவை கொடிசியா மைதானத்தில் கடந்தவாரம் நடந்த இறுதிப்போட்டியில் சாம் விஷால், கெளதம், புன்யா, மூக்குத்தி முருகன் உள்ளிட்ட 5 பேர் மோதியதில் வாகை சூடினார் மூக்குத்தி முருகன். இதற்கு அவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடும், அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் தேடி வந்துள்ளது. இந்நிலையில் இப்போது தன் வெற்றிக்கு காரணமே இளையதளபதி விஜய் தான் என மனம் திறந்து சொல்லி இருக்கிறார் மூக்குத்தி முருகன்.

இதுகுறித்து அவர் என்ன சொன்னார் தெரியுமா? ஆரம்பத்தில் மூக்குத்தி முருகன் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வந்த இன்னிசை பாடிவரும் பாடலைத்தான் பெண் குரலில் பாடுவாராம்.

இந்த பாடலை பாடிய பின்னர் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, பலதாரப்பில் இருந்தும் இவருக்கு பாராட்டுக்கள் குவியவே அதிகமாக பாட வேண்டும் என்ற எண்ணம் உருவானதாகவும், அந்த ஊக்கம் தான் இந்த அளவுக்கு பாட வைத்ததாகவும் கூறுகிறார் மூக்குத்தி முருகன். கூடவே என் வாழ்வை அந்த வகையில் மாற்றியதே இளையதளபதி விஜய்தான் என நெகிழ்கிறார்.


நண்பர்களுடன் பகிர :