இந்த படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜயை விட பிரசாந்த் தான் டாப்..! Description: இந்த படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜயை விட பிரசாந்த் தான் டாப்..!

இந்த படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜயை விட பிரசாந்த் தான் டாப்..!


இந்த படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜயை விட பிரசாந்த் தான் டாப்..!

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு பாப்புலர் நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு இப்போதும் கூட பல ரசிகர்கள் உள்ளனர். நடிகர் பிரசாந்த் கதா நாயகனாக நடித்து இறுதியாக வெளியான ஜானி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பின்னர் நடிகர் பிரசாந்த் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் தெலுங்கில் வெளிவந்த வினய விதய ராமா என்ற படத்தில் துணை நடிகராக வந்து தமிழ் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கினார்.

இந்த அதிர்ச்சிக்கு காரணம், தல மற்றும் தளபதி இருவரும் நடிக்க வருவதற்கு முன்பே நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மார்க்கெட் குறைந்ததற்கு முக்கிய காரணம் அவர் டாக்டர் கலைஞர் இயக்கத்தில் நடித்த பொன்னர்-சங்கர் திரைப்படம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த திரைப்படம் பிரம்மாண்ட செலவில் உருவாகி தோல்வியை சந்தித்தது. இதனால் நடிகர் பிரசாந்தை வைத்து அதிக பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க எந்த ஒரு இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என கூறப்படுகின்றது.

மேலும் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு சில அரசியல் பிரச்சினையால் பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் பிரசாந்த் தொடர்ந்து ஆக்ஷன் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து குடும்ப கதையை ஒதுக்கியது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.


நண்பர்களுடன் பகிர :