சூப்பர்சிங்கரில் ஜெயித்த மூக்குத்தி முருகன்.. விஜய் டிவியை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை.. போங்காட்டம் என தாக்கு...! Description: சூப்பர்சிங்கரில் ஜெயித்த மூக்குத்தி முருகன்.. விஜய் டிவியை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை.. போங்காட்டம் என தாக்கு...!

சூப்பர்சிங்கரில் ஜெயித்த மூக்குத்தி முருகன்.. விஜய் டிவியை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை.. போங்காட்டம் என தாக்கு...!


சூப்பர்சிங்கரில் ஜெயித்த மூக்குத்தி முருகன்.. விஜய் டிவியை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை.. போங்காட்டம் என தாக்கு...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் உண்டு. வெற்றிகரமாக அதன் 7வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் பலரது திறமை வெளி உலகுக்கு தெரிவது மிக ஆரோக்கியமான விசயம். ஆனால் இதன் முடிவுகள் சில நேரம் அர்ச்சையில் சிக்கிக் கொண்டு விடுகிறது. கடந்த ஞாயிறு கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த இறுதி நிகழ்வுக்கு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், ஸ்வேதாமேனன், பென்னிதயால் ஆகியோர் இருந்தனர். ம.கா.ப.ஆனந்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்கினர்.

இதில் டாப் 5 போட்டியாளர்களுக்கான இறுதிச்சுற்று நடந்தது. இதில் விக்ரம், புண்யா, முருகன், சாம் விஷால், கெளதம் ஆகியோர் மோதினர். இதில் மூக்குத்தி முருகன் ஜெயித்தார்.

இவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடும், அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் பரிசாக வழங்கப்பட்டது. விக்ரம் இரண்டாம் இடமும், சாம்விஷால், புண்யாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால் காமெடியில் ஸ்டாராங்காகவும், இசையறிவில் கொஞ்சம் கம்மியாகவும் இருக்கும் மூக்குத்தி முருகனுக்கு முதல்பரிசா என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.

இதில் விஜய் டிவி மீது ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா. அதில் அவர், விஜய் டிவி, சூப்பர் சிங்கர் பட்டம் எப்போதுமே திறமையானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என நம்புகிறேன். அந்த 5 போட்டியாளர்களில் புண்யாவும், விக்ரமும் தான் இசை ரீதியாக அற்புதத்திறமைகள். சத்யபிரகாஷ் ஜெயிக்காததில் இருந்தே போங்காட்டம் துவங்கிடுச்சு.

எப்போதாவது நியாயமா சங்கீதத்தை மட்டும் கெளரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன்”என ட்விட்டரில் பொங்கியிருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா.


நண்பர்களுடன் பகிர :