தேசிய அளவில் இரண்டு தங்க பதக்கம் வென்று சாதித்த சத்யராஜ் பேரன்.. அப்படி என்ன விளையாட்டு தெரியுமா? Description: தேசிய அளவில் இரண்டு தங்க பதக்கம் வென்று சாதித்த சத்யராஜ் பேரன்.. அப்படி என்ன விளையாட்டு தெரியுமா?

தேசிய அளவில் இரண்டு தங்க பதக்கம் வென்று சாதித்த சத்யராஜ் பேரன்.. அப்படி என்ன விளையாட்டு தெரியுமா?


தேசிய அளவில் இரண்டு தங்க பதக்கம் வென்று சாதித்த சத்யராஜ் பேரன்.. அப்படி என்ன விளையாட்டு தெரியுமா?

சத்யராஜின் பேரன் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கி அசத்தியிருக்கிறான்.

தமிழ்த்திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, தொடர்ந்து கதாநாயகன் ஆனவர் சத்யராஜ். தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தாக்குப் பிடிக்கிறார்.

இவரது மகன் சிபிராஜ் ஸ்டூண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோர், கோவை பிரதர்ஸ் என அப்பா_மகன் கூட்டணியில் தொடர்ச்சியாய் படம் வந்தாலும் சிபிராஜால் பெரிய ரசிகர் கூட்டத்தில் செல்ல முடியவில்லை.

சிறிய இடைவெளிக்கு பின்பு நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கத் துவங்கினார் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட சில படங்கள் அதனால் நன்றாகப் போனது. சிபிராஜ்க்கு தீரன் என்ற மகன் உள்ளார்.

இவர் புனேவில் அண்மையில் நடந்த தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் கலந்திருக்கிறார். இது கொரியநாட்டின் தற்காப்புக்கலை. இப்போட்டியில் 2 தங்கப்பதக்கம் வாங்கி அசத்தியிருக்கிறார் தீரன்.

இதை மகிழ்ச்சியும், பெருமையுமாக இருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிபிராஜ். அதெபோல் தீரனின் புகைப்படத்தை பார்க்கவும் அச்சுஅசலாய் சிபிராஜ் போன்றே இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


நண்பர்களுடன் பகிர :