பிரபல நடிகருடன் நெருக்கத்தில் டிடி.. அவரே வெளியிட்ட புகைப்படம்.. அதன்பின் அவர் சொன்ன விளக்கம் இதுதான்..! Description: பிரபல நடிகருடன் நெருக்கத்தில் டிடி.. அவரே வெளியிட்ட புகைப்படம்.. அதன்பின் அவர் சொன்ன விளக்கம் இதுதான்..!

பிரபல நடிகருடன் நெருக்கத்தில் டிடி.. அவரே வெளியிட்ட புகைப்படம்.. அதன்பின் அவர் சொன்ன விளக்கம் இதுதான்..!


பிரபல நடிகருடன் நெருக்கத்தில் டிடி.. அவரே வெளியிட்ட புகைப்படம்.. அதன்பின் அவர் சொன்ன விளக்கம் இதுதான்..!

டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தொகுப்பாளர் தான் திவ்யதர்ஷினி. சின்னத்திரை தொகுப்பாளர் வட்டாரத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கும் டிடி’யின் கலகலப்பான பேச்சை திரை பிரபலங்கள் பலரும் கூட ரசித்து பார்ப்பது வழக்கம்.

கடந்த 2016ல் டிடி தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் அடுத்த சில மாதத்திலேயே டிடி விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவியது. ஆனால் இதற்கு டிடி பதில் எதுவும் சொல்லவில்லை.

இந்த நிலையில் தான் தனுஷ் தயாரித்த பவர் பாண்டியில் டைட்டில் கார்டில் திருமதியை தூக்கிவிட்டு செல்வி திவ்யதர்ஷினி என போடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இவரது மணவாழ்க்க பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது.

கருத்து வேறுபாட்டில் கடந்த 2017ல் தம்பதிகள் முறைப்படி விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவே வலம்வருகிறார் டிடி.

இப்படியான சூழலில் பிரபா நடிகர் ராணா டக்குபதியுடன் கிரிக்கெட் மைதானத்தில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் டிடி. அதில், ‘’எப்போதும், ஒரு நண்பரைப் போல, மற்றும் சகோதரனைப் போன்ற பண்புகள் கொண்ட ராணா டக்குபதிக்கு நன்றிகள். உங்கள் உபசரிப்புக்கு நன்றிகள்.”எனக் கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :