கவின், லாஸ்லியாவை அசால்டாக ஓவர்டேக் செய்த வனிதா விஜயகுமார்... பிக்பாஸ் சக போட்டியாளர்களே ஷாக்... கொட்டும் வாய்ப்பில் வனிதா குஷி..! Description: கவின், லாஸ்லியாவை அசால்டாக ஓவர்டேக் செய்த வனிதா விஜயகுமார்... பிக்பாஸ் சக போட்டியாளர்களே ஷாக்... கொட்டும் வாய்ப்பில் வனிதா குஷி..!

கவின், லாஸ்லியாவை அசால்டாக ஓவர்டேக் செய்த வனிதா விஜயகுமார்... பிக்பாஸ் சக போட்டியாளர்களே ஷாக்... கொட்டும் வாய்ப்பில் வனிதா குஷி..!


கவின், லாஸ்லியாவை அசால்டாக ஓவர்டேக் செய்த வனிதா விஜயகுமார்...   பிக்பாஸ் சக போட்டியாளர்களே ஷாக்... கொட்டும் வாய்ப்பில் வனிதா குஷி..!

குமுதா ஹேப்பி அண்ணாச்சி என விஜய்சேதுபதி பேசும் வசனம் ரொம்ப பேமஸ். அதை அப்படியே உல்ட்டா செய்து வனிதா ஹேப்பி என போர்டு மாட்டி விடலாம். அந்த அளவுக்கு வனிதா விஜயகுமார் காட்டில் அடைமழை தான்!

அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3ல் அதிகமான மக்களால் வெறுக்கப்பட்ட நபராக இருந்தவர் வனிதா. இதனால் அவருக்கு பெரிதாக வாக்களிக்காமல் ரசிகர்க வீட்டை விட்டு துரத்த, அவர் போனபின்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே குறைந்துவிட்டதென ரீ எண்ட்ரி கொடுத்து பிக்பாஸே உள்ளேவிட்ட காட்சியெல்லாம் நடந்தது.

பிக்பாஸில் புகழின் உச்சத்துக்குப் போன கவின், லாஸ்லியாவுக்கே இதுவரை பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வனிதாவுக்கோ புதிய நிகழ்ச்சி ஒன்றை அலேக்காக தூக்கி கொடுத்திருக்கிறது விஜய் டிவி. பிக்பாஸ் நிகழ்ச்சியால் தனது இமேஜ் வெகுவாக சரிந்தாலும், ஓய்ந்துகிடந்த தனக்கு அந்த நிகழ்ச்சி தானே மக்களிடம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தது என்பதால் தொடர்ந்து விஜய் டிவியின் மீதும் விஸ்வாசத்தில் இருக்கிறாராம் வனிதா.

இளையதளபதி விஜய்யோடு சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானபோது, 9ம் வகுப்பு படித்தார் வனிதா. இப்போது விஜய் டீவி அவருக்கு குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியை கொடுத்துள்ளது. அதற்கு முன்னோட்டமான வீடியோவையும் வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

இதில் வனிதா குக்காகவும், கலக்கப்போவது யாரு பாலா கோமாளியாகவும் தோன்றுகிறார்கள். வனிதாவின் வில்லத்தனம், பாலாவின் காமெடித்தனம் என இரண்டும் சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸைக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறது விஜய் டிவி.

இதேபோல் சில திரைப்படங்களிலும் வில்லி ரோலுக்கு வனிதாவிடம் பேசி வருகிறார்கள். மொத்தத்தில் வனிதா காட்டில் விழும் அடைமழையால் பிக்பாஸின் சக போட்டியாளர்கள் கொஞ்சம் காண்டில் தான் இருக்கிறார்களாம்.


நண்பர்களுடன் பகிர :