நடிகர் மணிவண்ணன் இறந்ததும், அவர் மனைவிக்கு நடந்த சோகம்.. யாரும் அறியாத சோகக்கதை..! Description: நடிகர் மணிவண்ணன் இறந்ததும், அவர் மனைவிக்கு நடந்த சோகம்.. யாரும் அறியாத சோகக்கதை..!

நடிகர் மணிவண்ணன் இறந்ததும், அவர் மனைவிக்கு நடந்த சோகம்.. யாரும் அறியாத சோகக்கதை..!


 நடிகர் மணிவண்ணன் இறந்ததும், அவர் மனைவிக்கு நடந்த சோகம்..  யாரும் அறியாத சோகக்கதை..!

குணச்சித்திரம், நகைச்சுவை என நடிப்பிலும், இயக்கத்திலும் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் நடிகர் மணிவண்ணன். இவரது இயக்கத்தில் வெளியான முதல்படமான கோபுரங்கள் சாய்வதில்லை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இங்கேயும் ஒரு கங்கை, இளமை காலங்கள், நூறாவதுநாள், பாலைவன ரோஜாக்கள், முதல்வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரொயதம்பி, அமைதிப்படை, 24 மணிநேரம், ஆண்டான் அடிமை ஆகிய படங்களை இயக்கிய மணிவண்ணன்,கடைசியாக சத்யராஜ் நடித்த அமைதிப்படை இரண்டாம் பாகமான நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ என்னும் படத்தை இயக்கி இருந்தார். இவரது பாலைவன ரோஜாக்கள் படத்துக்கு கருணாநிதி கதை, வசனம் எழுதியிருந்தார்.

புகழின் உச்சியில் இருந்தபோதே கடந்த 2013ல் ஜூன் 15ம் தேதி மாரடைப்பால் மணிவண்ணன் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்னும் மனைவியும், ஜோதி என்னும் மகளும், ரகுவண்ணன் என்னும் மகனும் உள்ளனர்.

மணிவண்ணனின் திடீர் மறைவை செங்கமலத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லையம். மணிவண்ணனையே நினைத்து சாப்பிடாமலும், தூங்காமலும் தவியாய் தவித்து வந்துள்ளார் செங்கமலம். அதே ஏக்கத்தில் மணிவண்ணன் இறந்த இரண்டே மாதத்தில் செங்கமலமும் இறந்து போனார்.

மணிவண்ணன் உயிருடன் இருகும்போதே தனது மகனுக்கு ஈழத்து பெண் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்திருந்தார் மணிவண்ணன். ஆனால் அவர் திருமணத்துக்கு முன்பே இறந்து போக, செங்கமலமும் இறந்த நிலையில் பெற்றோர் இல்லாமல் நிகழ வேண்டி இருந்தது மணிவண்ணன் மகன் திருமணம். மணிவண்ணனின் நெருங்கிய நண்பரான சத்தியராஜ் தான் அப்பா ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தினாராம்.


நண்பர்களுடன் பகிர :