சுய நினைவு இழந்த மனைவி... அன்புகாட்டியே மீட்டெடுத்த கணவர்.. நெஞ்சை உருக்கும் பாசக் கதை..! Description: சுய நினைவு இழந்த மனைவி... அன்புகாட்டியே மீட்டெடுத்த கணவர்.. நெஞ்சை உருக்கும் பாசக் கதை..!

சுய நினைவு இழந்த மனைவி... அன்புகாட்டியே மீட்டெடுத்த கணவர்.. நெஞ்சை உருக்கும் பாசக் கதை..!


சுய நினைவு இழந்த மனைவி... அன்புகாட்டியே மீட்டெடுத்த கணவர்.. நெஞ்சை உருக்கும் பாசக் கதை..!

‘அன்பை போல் சிறந்த ஆயுதம்’ எதுவும் இல்லை. இந்த உலகில் எதையும் சாதிக்கும் வலிமை அன்புக்கு உண்டு. அவ்வளவு பெரிய யானை பொடியாக இருக்கும் பாகனை கண்டு பயப்படுவது அவன் கையில் இருக்கும் குச்சியை பார்த்து அல்ல. அவன் ஒருவகையில் யானை மீது செலுத்தும் அன்பினால்தான்!

அப்படி ஒரு அன்பை செலுத்தி சுய நினைவு இழந்த தன் கணவனை மீட்டிருக்கிறார் மனைவி ஒருவர். அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த தம்பதிகள் ஸ்டீவ் கர்டோ_ கேம்ரே. பிரசவத்துக்காக கேம்ரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, ப்ரீக்லாம்ப்சியா என்னும் நோய் தாக்கி நினைவுகளை இழந்தார். நினைவுகளை முற்றாக இழந்த நிலையிலேயே பிரசவம் நடந்து, ஒரு ஆண்குழந்தையையும் பெற்றெடுத்தார்.

ஆச்பத்திரியிலேயே ஒருமாதத்துக்கு மேல் இருந்தும் மனைவிக்கு நினைவு வராததால் குழந்தையையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார் ஸ்டீவ் கர்டோ. ஆனால் ஸ்டீவ் கர்டோ அந்த சவால்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார். அவரது மனைவிக்கு அன்றாடப் பணிகளான பல்துவக்குவது தொடங்கி, சமைப்பதுவரை நினைவுகளில் இருந்து நகர்ந்து போனது.

மேலும், தனது மனைவியையும் ஒரு குழந்தையைப் போல பார்த்துக் கொண்டார் ஸ்டீவ் கர்டோ. ஒருகட்டத்தில் தன் கணவரைப் பார்த்து மனைவி கேம்ரே, ‘’நீ யார் என எனக்குத் தெரியாது. ஆனா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு எனக்குத் தெரியும்.”என கூறி நெகிழ வைத்திருக்கிறார். ஒருகட்டத்தில் தாய்மையின் மகத்துவம் பற்றி நோய்தாக்கத்தால் உணராமல் இருந்த கேம்ரே, இப்போது தன் பிள்ளைக்கு நல்ல தாயாக இருப்பதாகவும் நெகிழ்கிறாட் ஸ்டீவ் கர்டோ.

ஒரு குழந்தையாகிப் போன தாயை, தன் அன்பால் மீட்டெடுத்த இந்த கணவரை நீங்களும் வாழ்த்தலாமே...


நண்பர்களுடன் பகிர :

E
E.s. 11மாதத்திற்கு முன்
Thapa typing panathaga mala mathi typing panirugaga