பெற்றோர் கண்முன்னே குழந்தைக்கு நடந்த பயங்கரம்.. சுஜித் சம்பவத்தை போல் மேலும் ஒரு துயரம்..!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் வீழ்ந்து 80 மணிநேர போராட்டத்துக்கு பின்பு சடலமாக மீட்கப்பட்ட சுஜித் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. அதன் பின்னர் தமிழகம் முழுவதுமே மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது. இதோ அந்த வரிசையில் இப்போது மஞ்சாங்கயிறு ஒரு குழந்தையின் உயிரைப் பறித்திருக்கிறது.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்யும் சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த கோபால், தன் மனைவி சுமித்ரா, ஒரேமகன் அபிமன்யு ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் குடும்பத்தோடு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் போய்விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் அவர் போய்க் கொண்டிருந்த காற்றில் பறந்துவந்த மாஞ்சா நூல், மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியது.
உடனே அக்கம் பக்கத்தினரும், பெற்றோருமாக குழந்தையை சிகிட்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே சிகிட்சைக்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்திருப்பதைச் சொன்னார்கள். இதுதொடர்பில், ஆர்.கேநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசைப் பொறுத்தவரை மாஞ்சா நூலால் வடசென்னை பகுதியில் நடந்த தொடர் உயிரிழப்புகளை கவாத்தில் கொண்டு மாஞ்சா நூலுக்கு தடைவிதித்து இருந்தது. ஆனால் தடையை மீறி அது பயன்படுத்தப்பட்டு இருப்பதும், அதனால் ஒரு குழந்தை இறந்திருப்பதும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.