எலும்புக்கூடாக கண்டெடுக்கபட்ட தங்கை… அழகான தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்.. அதிரவைக்கும் காரணம்..! Description: எலும்புக்கூடாக கண்டெடுக்கபட்ட தங்கை… அழகான தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்.. அதிரவைக்கும் காரணம்..!

எலும்புக்கூடாக கண்டெடுக்கபட்ட தங்கை… அழகான தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்.. அதிரவைக்கும் காரணம்..!


எலும்புக்கூடாக கண்டெடுக்கபட்ட தங்கை… அழகான தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்.. அதிரவைக்கும் காரணம்..!

பாசம் என்பது உறவுகள் மீது செலுத்தப்படும் உன்னதமான அன்பு. ஆனால் சொந்த தங்கையையே துள்ளத் துடிக்க கொலை செய்துவிட்டு அண்ணன் ஒருவன் நடித்ததைப் பார்த்து போலீஸாரே மிரண்டு போயினர்.

மங்களூரை சேர்ந்த பிரான்சிஸ் தனது 16வயது மகள் பியோனாவை காணவில்லை என போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். ஒருகட்டத்தில் பியானோ இறந்திருப்பது தெரியவர, ஆனால் அதன் பின்னரும்கூட அவரது செல்போனில் இருந்து ஒரு இளைஞருக்கு தொடர்ந்து மெசேஜ் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் பியானோ விவகாரத்தில் அவர் உடன்பிறந்த சகோதரர் மீதே போலீஸாருக்கு சந்தேகப்பார்வை விழுந்தது.

பியானோவின் அண்ணனான சாம்சன் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அவரை கடந்த 2017ம் ஆண்டு ராஜேஷ் என்ற வாலிபர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த சாம்சன் மதுபோதைக்கு அடிமையாகி இருக்கிறார். செல்போனும், கஞ்சாவுமே கதியென வாழ்ந்தார் சாம்சன். இதைப் பார்த்த அவரது தந்தை பிரான்சிஸ், மகன் சாம்சனின் செல்போனை பறித்துக்கொண்டதோடு அவருக்கு வாழ்க்கைப்பாடத் தத்துவமும் சொல்லி இருக்கிறார்.

அதேநேரம் தங்கை பியானோ மட்டும் செல்போன் பயன்படுத்துவது சாம்சனுக்கு பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து போலீஸாருக்கு தெரியவந்ததும், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது சொந்த தங்கை பியானோவோடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரை அவரது அண்ணனே சுத்தியலால் அடித்து கொலை செய்ததும், அவரை வீட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தள்ளி உள்ள இடத்தில் புதைத்திருப்பதும் தெரிய வந்தது.

அவரது ஆண் நண்ருக்கும் அவர் தொடர்ந்து செல்போனில் மெஜேஜ் அனுப்பி வந்திருக்கிறார். சாம்சன் கூறிய இடத்தில் தோண்டிப் பார்த்தபோது பியானோவின் எலும்புக்கூடுகளே கிடைத்தன. இந்த வழக்கில் அவரது அண்ணன் சாம்சனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :