மகளை திட்டிய மர்மநபர்... அசிங்கமாக திருப்பித் திட்டிய நடிகை குஷ்பு..! Description: மகளை திட்டிய மர்மநபர்... அசிங்கமாக திருப்பித் திட்டிய நடிகை குஷ்பு..!

மகளை திட்டிய மர்மநபர்... அசிங்கமாக திருப்பித் திட்டிய நடிகை குஷ்பு..!


மகளை திட்டிய மர்மநபர்... அசிங்கமாக திருப்பித் திட்டிய நடிகை குஷ்பு..!

தமிழ் திரையிலகில் ஒருகாலத்தில் முண்ணணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் ரசிகர்கள் அவருக்கு கோவிலே கட்டியிருந்தனர். பிரபல நடிகையான குஷ்பு, இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்தார். அதன் பின்பு தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிலபடங்களை தயாரித்துவரும் குஷ்பு, சின்னத்திரைப் பக்கம் ஒதுங்கினார்.

நடிகை குஷ்புவுக்கு ஆனந்திதா, அவந்திதா என இருமகள்கள் உள்ளனர். குஷ்பு சமீபத்தில் தீபாவளியை தனது மகள் ஆனந்திதாவுடன் கொண்டாடிவிட்டு, அவந்திதாவை மிஸ் செய்வதாக பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன் உருவர் ஆனந்திதாவின் உருவத்தை விமர்சித்து மிக மோசமாக உருவக்கேலி செய்திருந்தார்.

பதிலுக்கு அவரது பானியிலேயே இறங்கி தரை லோக்கலாக குஷ்புவும் அவரை திட்டி பதிவிட்டார். இது இரண்டும் ட்விட்டரில் வைரலான நிலையில், அந்த பதிவையே தூக்கியிருக்கிறது ட்விட்டர்.

இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேசிய குஷ்பு 2 நிமிடப் புகழுக்கு அலைபவர்களே இப்படி தரமற்ற செயலலில் ஈடுபடுவதாக லண்டனில் இருந்தபடி பேட்டி கொடுத்திருக்கிறார். இதனிடையே மோசமாக பதிவிட்ட வாலிபர் ட்விட்டரில் தன் டிபியை மாற்றிவிட்டு சைலண்டாகி விட்டாராம்.


நண்பர்களுடன் பகிர :