இறந்ததாக புதைக்கப்பட்டவர்... 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்வந்த ஆச்சர்யம்! Description: இறந்ததாக புதைக்கப்பட்டவர்... 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்வந்த ஆச்சர்யம்!

இறந்ததாக புதைக்கப்பட்டவர்... 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்வந்த ஆச்சர்யம்!


இறந்ததாக புதைக்கப்பட்டவர்... 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்வந்த ஆச்சர்யம்!

இறந்துவிட்டதாக கருதி புதைக்கப்பட்ட ஒருவர் 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சன்னா ஏரண்ணா 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது 30வது வயதில் இறந்துபோனார். இவரது உடலை உறவினர்கள் அடக்கமும் செய்தனர். இப்போது அதில் இருந்து 50 ஆண்டுகள் கழித்து அவர் திரும்பி வந்துள்ளார்.

ஆந்திராவில் சுயநினைவின்றி வாழ்ந்துவந்த முதியவர் ஒருவர் ஏரண்ணா தோற்றத்தில் இருந்தார். அவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த எரண்ணா குடும்பத்தினர் அவரை சொந்த ஊருக்கு அழைத்துவந்தனர்.

வீட்டுக்கு வந்ததும் ஏரண்ணாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகள் வரத்துவங்கியது. அப்போதுதான் தனது குடும்பத்தோடு தான் சேர்ந்திருப்பதை உணர்ந்திருக்கிறார் ஏரண்ணா.

தற்போது தனது மனைவியின் சொந்த ஊரான கர்நாடகாவின் சிக்ரநாயக்கனஹள்ளியில் வசிகிறார் ஏரண்ணா. ஆனாலும் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர், ஆந்திராவில் சுயநினைவின்றி சுத்தியது எப்படி? என அவர் குடும்பத்தினர் குழம்பிவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :