எனக்கு மாப்பிள்ளை வேண்டும்... முகநூலில் பதிவிட்ட கேரள பெண்.. வீடு தேடி வந்த அதிஷ்டம்..! Description: எனக்கு மாப்பிள்ளை வேண்டும்... முகநூலில் பதிவிட்ட கேரள பெண்.. வீடு தேடி வந்த அதிஷ்டம்..!

எனக்கு மாப்பிள்ளை வேண்டும்... முகநூலில் பதிவிட்ட கேரள பெண்.. வீடு தேடி வந்த அதிஷ்டம்..!


 எனக்கு மாப்பிள்ளை வேண்டும்... முகநூலில் பதிவிட்ட கேரள பெண்.. வீடு தேடி வந்த அதிஷ்டம்..!

கேரளப் பெண்கள் எப்போதுமே தைரியத்து பெயர் பெற்றவர்கள். அதை அப்படியே நிஜமாக்கி மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் கேரளத்தை சேர்ந்த ஜோதி.

முகநூலை பலரும் பொழுதுபோக்குத் தளமாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் அவசரமாக ரத்தம் தேவை உள்ளிட்ட சமயங்களில் பேஸ்புக் பதிவு ஆபத்தாந்தவனாக கைகொடுக்கும்.

ஆனால் கேரளத்தை சேர்ந்த ஜோதி என்ற பெண், பேஸ்புக்கையே, மேட்ரிமோனியாக பயன்படுத்தி இருப்பது வைரலாகியுள்ளது.

மலப்புரத்தை சேர்ந்த ஜோதி தன் பேஸ்புக் பக்கத்தில், ‘’என் பேரு ஜோதி வயசு 28. எனக்கு பேரண்ட்ஸ் கிடையாது. பேஷன் டிசைனிங் படிச்சுருக்குற எனக்கு நல்ல லைப் பாட்னர் வேண்டும். நண்பர்களே..உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். தெரியப்படுத்துங்கள். ஜோதிடம், சாதி இவைகளை நான் பார்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன் உடன் பிறப்புகளின் படிப்பு, வேலையையும் குறிப்பிட்டு இவர் போட்டிருக்கும் பதிவு, இதுவரை 6000 பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பேஸ்புக் ஓனர் மார்க்குகும் சேர்த்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‘’என்னை போன்றோர் தங்கள் வாழ்க்கை துணையை தேடிக்கொள்ள பேஸ்புக் மேட்ரிமோனி வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். “என வேண்டுகோள் விடுத்துள்ளார். பேஸ்புக்கில் தன் சுயபடத்தை போடவே தயக்கம் காட்டும் பெண்களுக்கு மத்தியில் ஜோதி தைரிய லெட்சுமி தானே!


நண்பர்களுடன் பகிர :