80 மணிநேரம் நடந்த மீட்பு பணி... சுஜித் உயிர் பிரிந்தது இந்த நேரத்தில்தான்..! Description: 80 மணிநேரம் நடந்த மீட்பு பணி... சுஜித் உயிர் பிரிந்தது இந்த நேரத்தில்தான்..!

80 மணிநேரம் நடந்த மீட்பு பணி... சுஜித் உயிர் பிரிந்தது இந்த நேரத்தில்தான்..!


80 மணிநேரம் நடந்த மீட்பு பணி... சுஜித் உயிர் பிரிந்தது இந்த நேரத்தில்தான்..!

நேரலையில் சுஜித் மீட்புப்பணிகளை பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் கண்களும் கண்ணீரால் நனைந்து இருந்தது. 80 மணிநேர போராட்டத்துக்கு பின்பும் சுஜித் உயிருடன் வந்து சேரவில்லை.

இதோ இப்போது திமுக பத்து லட்சமும், தமிழக அரசு பத்து லட்சமும் சுஜித் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. சுஜித்தின் அம்மாவுக்கு அரசுவேலை வழங்க கோரிக்கை விடுத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் அழுதாலும், புரண்டாலும், ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னாலும் மீண்டே வர முடியாத இடத்துக்கு போயிருக்கிறான் சிறுவன் சுஜித்.

80 மணிநேரம் வரை மீட்புப்பணி நீடித்தாலும், சிறுவன் ஆழ்துளை கிணற்றில் 18 மணிநேரத்திலேயே இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பெய்த மழையில் தலையில் மண்சரிவு ஏற்பட்டு சிறுவன் சுஜித் உயிர் இழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இனிமேல், இப்படியொரு மரணம் நிகழாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது!


நண்பர்களுடன் பகிர :