என்பிள்ள மரணமே இறுதியானதாக இருக்கட்டும்.. கண்ணீர்மல்க பேசிய சுஜித்தின் அம்மா...! Description: என்பிள்ள மரணமே இறுதியானதாக இருக்கட்டும்.. கண்ணீர்மல்க பேசிய சுஜித்தின் அம்மா...!

என்பிள்ள மரணமே இறுதியானதாக இருக்கட்டும்.. கண்ணீர்மல்க பேசிய சுஜித்தின் அம்மா...!


என்பிள்ள மரணமே இறுதியானதாக இருக்கட்டும்..  கண்ணீர்மல்க பேசிய சுஜித்தின் அம்மா...!

ஒட்டுமொத்த தேசத்தையும் சோகக்கடலில் மூழ்கச் செய்துவிட்டு கல்லறையில் துயில் கொள்கிறான் சுஜித். இந்நிலையில் சுஜித் தவறி விழுந்த இடத்தில் கோயில் கட்டுவதே தன் ஆசை எனவும், அவனுக்காக மீண்டுவர பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் உருக்கமாக அவனது தாய் கூறியிருக்கிறார்.

நடுக்காட்டுப்பட்டி திருச்சி மாவட்டத்தின் சின்னஞ் சிறிய கிராமம். அது இன்று அனைவருக்கும் தெரியவந்து, விழிப்புணர்வும் வரக் காரணம் ஆகியிருக்கிறான் சிறுவன் சுஜித். ஆரோக்கியதாஸ்_மலாமேரி தம்பதியின் இரண்டாவது மகனான சுஜித்தை மீட்க கடந்த ஐந்துநாள்களாக பலகட்ட முயற்சிகள் நடந்தது. அனைவரும் அவன் மீட்புக்காக பிரார்த்தனைகளும் செய்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காதவகையில் சிறுவன் சுஜித் பிணமாகவே மீட்கப்பட்டான்.

இந்நிலையில் இந்த சோகத்தின் விளிம்பில் சுஜித்தின் தாய் கலாமேரி சிலவிசயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘’ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் தொடரக்கூடாது. எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்கட்டும்.

சுஜித் தவறி விழுந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை. எனது மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’’ எனக் கூறினார்.


நண்பர்களுடன் பகிர :