சுஜித் நீங்க போராடி உயிரை விட்டுருக்கீங்க... கண்ணீருடன் வீடீயோ வெளியிட்ட மீரா மிதுன்..! Description: சுஜித் நீங்க போராடி உயிரை விட்டுருக்கீங்க... கண்ணீருடன் வீடீயோ வெளியிட்ட மீரா மிதுன்..!

சுஜித் நீங்க போராடி உயிரை விட்டுருக்கீங்க... கண்ணீருடன் வீடீயோ வெளியிட்ட மீரா மிதுன்..!


சுஜித் நீங்க போராடி உயிரை விட்டுருக்கீங்க... கண்ணீருடன் வீடீயோ வெளியிட்ட மீரா மிதுன்..!

ஒட்டுமொத்த நாட்டிலும் சோகம் படர்ந்து இருக்கிறது. சுஜித் வில்சன் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வரிடம் விசாரித்தார். ட்விட்டரிலும் பதிவிட்டார். மதங்களை கடந்து அனைவரும் சுஜித் மீண்டுவர பிரார்த்தனை செய்தனர். ஆனால் 80 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சடலமாகவே வெளியே வந்தான் சுஜித்.

சிறுவன் சுஜித் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘’இரண்டு வயது பாலகனை மண்ணுக்கு இரையாக்கி இருக்கிறோம். இது ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்கவேண்டிய விசயம். சுஜித் நீங்க பிறந்தது ஒரு காரணத்துக்காக...நீங்க போராடி ஒருவீரராக இறந்திருக்கிறீர்கள். உங்களை ஒரு தியாக செம்மலாகத்தான் நான் பார்க்கிறேன்.

உங்களுக்கு பின் எத்தனையோ குழந்தைகள் இறக்காமல் இருக்க, நீங்க உங்க வாழ்க்கையை தியாகம் செஞ்சு, போராடி உயிரை விட்டுருக்கீங்க. இந்த குழந்தையின் இறந்ததற்கு காரணம் தமிழக அரசின் மெத்தனபோக்கு, நம் அனைவரின் தப்பும்தான்.

நடுத்தர வர்க்கத்தில் பிறந்ததைத் தவிர சுஜித் எந்த தப்பும் செய்யலைன்னு நினைக்குறேன். அதுதான் அவரோட பெரியபாவம்..”என மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார் மீரா மிதுன்.


நண்பர்களுடன் பகிர :