சுஜித் செய்தி நேரலையில் மூழ்கிய பெற்றோர்... தண்ணீரில் மூழ்கிய குழந்தை.. இரண்டு வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்..! Description: சுஜித் செய்தி நேரலையில் மூழ்கிய பெற்றோர்... தண்ணீரில் மூழ்கிய குழந்தை.. இரண்டு வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்..!

சுஜித் செய்தி நேரலையில் மூழ்கிய பெற்றோர்... தண்ணீரில் மூழ்கிய குழந்தை.. இரண்டு வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்..!


சுஜித் செய்தி நேரலையில் மூழ்கிய பெற்றோர்... தண்ணீரில் மூழ்கிய குழந்தை..  இரண்டு வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்..!

ஒட்டுமொத்த நாடே ஆழ்துளை கிணற்றில் மூழ்கி உயிர் இழந்த சிறுவன் சுஜித்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. முகநூல் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களின் பக்கம் முழுவதும் சுஜித்திற்காக உருகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சுஜித் தொடர்பான நேரலையை பார்த்து டிவியே கதி என மூழ்கிய பெற்றோர்களின் கவனக்குறைவால் தூத்துக்குடியில் இரண்டு வயது குழந்தை ஒன்று இறந்து போன சோக சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர் லிங்கேஸ்வரன். நேற்று மாலை தானும் இரண்டு வயதான குழந்தையின் தந்தை என்னும் முறையில் தன் மனைவி நிஷாவுடன் சேர்ந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தின் மீட்பு பணிகளை செய்தித் தொலைக்காட்சி நேரலையில் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

கணவனும், மனைவியும் அந்த செய்தியோடு மிகவும் ஒன்றிப் போய்விட்டனர். அந்த செய்தியின் மீதே முழுக்கவனமும் இருந்ததால் தங்களது இரண்டு வயது குழந்தை சஞ்சனாவை கவனிக்கத் தவறிவிட்டனர்.

ஆனால் வீட்டில் ஹாலில் குழந்தையை காணாமல் பதட்டம் அடைந்தனர். வீட்டின் கழிப்பறையை திறந்து பார்த்தபோது, அங்கு இருந்த தண்ணீர் கேணுக்குள் சஞ்சனா தலைகுப்புற கவிழ்ந்து மூச்சு திணறியது தெரியவந்தது. உடனே மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு சஞ்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்ல திரேஷ்புரம் முழுவதும் சோகத்தில் கிடக்கிறது.


நண்பர்களுடன் பகிர :