சினிமா கூத்தாடிகளிடம் பாடம் கற்காத அரசியல் கூத்தாடிகள்... சுஜித் விவாகாரத்தில் காட்டமான நடிகர் ராஜ்கிரண்..! Description: சினிமா கூத்தாடிகளிடம் பாடம் கற்காத அரசியல் கூத்தாடிகள்... சுஜித் விவாகாரத்தில் காட்டமான நடிகர் ராஜ்கிரண்..!

சினிமா கூத்தாடிகளிடம் பாடம் கற்காத அரசியல் கூத்தாடிகள்... சுஜித் விவாகாரத்தில் காட்டமான நடிகர் ராஜ்கிரண்..!


சினிமா கூத்தாடிகளிடம் பாடம் கற்காத அரசியல் கூத்தாடிகள்... சுஜித் விவாகாரத்தில் காட்டமான நடிகர் ராஜ்கிரண்..!

நடிகர் ராஜ்கிரணுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், நடிகராவும் ஜொலிப்பவர் ராஜ்கிரண்.

திருச்சியில் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததில் மீட்புப்பணியில் நடக்கும் மெத்தனப் போக்கால் கடும் கோபம் அடைந்திருக்கிறார் நடிகர் ராஜ்கிரண். இதுகுறித்து மிகுந்த கோபம் அடைந்துள்ள அவர், தன் முகநூல் பக்கத்தில் இது குறித்து எழுதியிருக்கிறார். இதோ அந்த பதிவு அப்படியே...

சில வருடங்களுக்கு முன்பு

"அறம்" என்று ஒரு திரைப்படம் வந்தது... ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து விடும், குழந்தைகள் பற்றிய, "விழிப்புணர்வு" ஏற்படுத்துவதற்கான, சினிமா கூத்தாடிகளின் சமூக அக்கறை அது... ஆனால், அரசியல் கூத்தாடிகள் அதிலிருந்து எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை...

அரசாங்கமே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்கிற, சோம்பேறித்தனம் மக்களிடம் பெருகிவிட்டது...

"தோண்டிய ஆழ்துளைக்கிணற்றை மூடாமல் விட்டால், அது ஆபத்தானதே, அதை மூடி விட வேண்டுமே" என்ற தனி மனித ஒழுக்கம் குறைந்து விட்டது...

நாம் எப்போது திருந்தப்போகிறோம் என்பது தெரியவில்லை...

இப்போது, அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், களத்தில் நின்று, குழந்தையை மீட்க போராடுவது, கொஞ்சம் ஆறுதலளிக்கிறது. இருந்தாலும், குழந்தையை கண்ணால் கண்டால் தானே, பெற்ற தாய்க்கும், நமக்கும், தமிழக மக்களுக்கும், நெஞ்சு படபடப்பு அடங்கி நிம்மதி வரும்...

எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்து விட்ட நம் நாட்டில், இந்தப்பிரச்சினைக்கு தீர்வாக, ஒரு நல்ல தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க முடியாதா...

மாலை 5 மணிக்கு தெரிய வந்த சம்பவத்துக்கு, காலை தான், "பேரிடர் மீட்புக்குழு" வருகிறதென்றால், இதை எப்படி எடுத்துக்கொள்வது...?

இறைவா, நாங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் இருக்கிறோம்... வழி தெரியாமல் தவிக்கிறோம்... அழுது அழுது உன்னிடமே மன்றாடுகிறோம்...

எங்கள் குழந்தையை எப்படியாவது மீட்டுக்கொடுத்து, எங்கள் இதயங்களின் படபடப்பை போக்கி கிருபை செய்...”என்று எழுதியிருக்கிறார்


நண்பர்களுடன் பகிர :