குடிசை வீட்டிலதான் இருந்தோம்... ரொம்ப சங்கடமா இருக்கும்... பாண்டியன் ஸ்டோர் முல்லையை துரத்திய சோகம்..! Description: குடிசை வீட்டிலதான் இருந்தோம்... ரொம்ப சங்கடமா இருக்கும்... பாண்டியன் ஸ்டோர் முல்லையை துரத்திய சோகம்..!

குடிசை வீட்டிலதான் இருந்தோம்... ரொம்ப சங்கடமா இருக்கும்... பாண்டியன் ஸ்டோர் முல்லையை துரத்திய சோகம்..!


குடிசை வீட்டிலதான் இருந்தோம்... ரொம்ப சங்கடமா இருக்கும்...   பாண்டியன் ஸ்டோர் முல்லையை துரத்திய சோகம்..!

தனியார் தொலைக்காட்சி ஒன்ற்ல் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்னும் பாத்திரத்தில் நடித்து பட்டி, தொட்டியெங்கும் பிரபலம் ஆகிவிட்டார். ஆனால் இவரின் ஆரம்பகாலம் மிகவும் வலியும், சோகமும் நிறைந்தது.

இதைப்பற்றி சித்ரா இப்போது பிரபல நாளிதழ் ஒன்றிடம் மனம் திறந்துள்ளார். அதில் அவர், ‘’என் அண்ணனும், அக்காவும் என்னைவிட அதிக வயது மூத்தவர்கள். இதனால் நான் கருவில் இருக்கும்போதே என் அம்மா இன்னொரு குழந்தை வேண்டாமென மருந்தெல்லாம் சாப்பிட்டார்கள். அதையெல்லாம் மீறி, எதிர்த்துதான் நான் பிறந்தேன்.

என் பரம்பரையில் முதல் டிகிரி கோல்டரும் நான் தான். அதுவும் முதுகலை படிச்சேன். என் வீட்ல என்னை மீடியா பீல்டுக்கு அனுப்பக் கூடாதுன்னு பிடிவாதமாஇருந்தாங்க. பிரண்ட் மூலமாத்தான் விஜய் டிவியில் இண்டர்வியூ நடகுதுன்னு தெரிஞ்சுது. முதல்ல ஒரு பிரேமிலாவது நாம தெரிஞ்சுடமாட்டமான்னு நினைச்சேன்.

மக்கள் டிவியில் தான் முதல்வாய்ப்பு கிடைச்சுது. முதலில் குடிசை வீட்டில் இருந்தோம். அப்புறம் அரசு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்குனாங்க. அது தீப்பெட்டி சைஸ்தான் இருக்கும். இதனால யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போகவே சங்கடமா இருக்கும்.

சின்ன வயசுல என்னை ரொம்ப நல்லா பார்துக்கிட்ட என்னோட அம்மா, அப்பாவுக்கு இப்போ வீடுகட்டிக் கொடுத்துட்டேன். கூட்வே இரண்டு சின்ன வீடு கட்டி வாடகைக்கு விட்டு, அந்த வருமானம் அவுங்களுக்கு கிடைக்குற மாதிரி பண்ணிருக்கேன்.”என தான் கடந்துவந்த பாதையை சொல்லி நெகிழ்கிறார் சித்ரா.


நண்பர்களுடன் பகிர :