தங்கையை சுமந்தபடி 28 ஆண்டுகளாக வாழும் அண்ணன்.. நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு பாசக்கதை..! Description: தங்கையை சுமந்தபடி 28 ஆண்டுகளாக வாழும் அண்ணன்.. நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு பாசக்கதை..!

தங்கையை சுமந்தபடி 28 ஆண்டுகளாக வாழும் அண்ணன்.. நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு பாசக்கதை..!


தங்கையை சுமந்தபடி 28 ஆண்டுகளாக வாழும் அண்ணன்.. நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு பாசக்கதை..!

கேரளத்தில் திரைப்படங்களையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு அண்ணன்_தங்கை பாசத்துக்கான நிஜ நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. இதை ஒட்டுமொத்த மலையாளிகளும் கொண்டாடியும் வருகின்றனர். அப்படி என்ன என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேரளத்தின் மனுவும், மீனுவும் அண்ணன்_தங்கை. பிறவியிலேயே நோயால் பாதிக்கப்பட்ட மீனுவால் நடக்க முடியாது. இப்போது மீனுவுக்கு 28 வயது. அதேநேரம் அவரது அன்றாடப் பணியையும்கூட அவரால் ஒரு துணை இருந்தால்தான் செய்ய முடியும். மீனுவை அவரது தாயாரை விட சின்ன வயதில் இருந்தே அவரது அண்ணன் மனுதான் தன் மடியில் சுமந்து கவனித்துக் கொள்கிறார். அண்மையில் மனுவின் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போதும் கூட தன் தங்கை மீனுவை தூக்கிக் கொண்டு போனார் மனு.

இதுபற்றி சொல்லும்போதே நெகிழ்ந்து போகும் மனு, தான் மீனுவுக்கு அண்ணன் இல்லை. தந்தை என நெகிழ்கிறார். இவர்களது இந்த பாசமும், அண்மையில் தன் நிச்சயதார்த்தத்துக்கு நடக்க முடியாத தங்கை மீனுவை, மனு தூக்கி சென்றதும் வீடியோவாக இப்போது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :