எங்கே போனார் அம்மா பகவான்? தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்..! Description: எங்கே போனார் அம்மா பகவான்? தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்..!

எங்கே போனார் அம்மா பகவான்? தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்..!


எங்கே போனார் அம்மா பகவான்? தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்..!

சாமியார்கள் என்றாலே இப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த பட்டியலில் இப்போது இணைந்திருக்கிறார் ஆந்திராவை சேர்ந்த சாமியார் ஒருவர். விஷ்ணுவின் அவதாரமாக தன்னை அறிவித்துக்கொண்ட 70 வயது சாமியாரும், அவரது மனைவி அம்மா பகவானும் மாயமானது பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரத்தின் நெகமம் பகுதியில் கல்கி ஆசிரமம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை நடத்தி வந்த விஜயகுமார் திடீரென தன் பக்தர்களுக்கு தான் மகா விஷ்ணுவின் அவதாரம் என பிரகடனப்படுத்தினார். அன்று முதல் இவர் கல்கி பகவான் என்றும், அவரது மனைவி பத்மாவதி, அம்மா பகவான் என்றும் அழைக்கப்பட்டார்.

பலநாடுகளில் இருந்தும் வந்து குவிந்த நிதியில் ரியல் எஸ்டேட், வேலூரில் ஆயிரம் ஏக்கர் நிலம், ஆந்திராவில் யுனிவர்சிட்டி, ஆப்பிரிக்காவில் நிலம் என சொத்துக்கள் வாங்கி குவித்தார். இவர் மீது வரி ஏய்ப்பு புகார் வரிசைகட்டிய நிலையில் தான் இரண்டே நாள் ரெய்டில் 500 கோடி இவர் ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சாமியார், அவரது மனைவி ஆகியோர் ஆசிரமத்தில் இல்லை. நிறுவனப் பொறுப்புகளை அவர்களது மகன் கவனித்து வந்தாலும் விஷ்ணுவின் அவதாரமாக தன்னை முன்னிறுத்திய கல்கி பகவானும், அவரது மனைவியும் எங்கே என்பதுதான் பெரிய கேள்வியாக நிற்கிறது.


நண்பர்களுடன் பகிர :