கொள்ளைபோன லலிதா ஜீவல்லரி உரிமையாளரின் பெருந்தன்மை.. உருகிப்போன கொள்ளையன்... ஆச்சர்யப்பட்ட போலீஸ்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா? Description: கொள்ளைபோன லலிதா ஜீவல்லரி உரிமையாளரின் பெருந்தன்மை.. உருகிப்போன கொள்ளையன்... ஆச்சர்யப்பட்ட போலீஸ்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

கொள்ளைபோன லலிதா ஜீவல்லரி உரிமையாளரின் பெருந்தன்மை.. உருகிப்போன கொள்ளையன்... ஆச்சர்யப்பட்ட போலீஸ்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?


கொள்ளைபோன லலிதா ஜீவல்லரி உரிமையாளரின் பெருந்தன்மை.. உருகிப்போன கொள்ளையன்... ஆச்சர்யப்பட்ட போலீஸ்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

தினசரிகளின் முதல் பக்கத்தை தன் மொட்டை தலை படத்தோடு அலங்கரிப்பவர் லலிதா ஜீவல்லரி உரிமையாளர். பெரிய நடிகர், நடிகைகளை நம்பி விளம்பரம் செய்யாமல், தானே சிம்பிளாக ஒரு டீசர்டுடன் தோன்றி, நாலுகடையில் பார்த்துட்டு வாங்க என அவர் தினசரிகளிலும், டிவியிலும் விளம்பரத்தில் வசீகரிப்பார்.

கடந்த 3ம் தேதி திருச்சியில் லலிதா ஜூவல்லரியில் புகுந்த கொள்ளையர்கள் சுவறில் துளைபோட்டு 30 கிலோ தங்கத்தை தூக்கிச் சென்றனர். கொள்ளையர்கள் இப்படி கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், சினிமா எடுத்ததும் இப்போது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் பிடிபட்ட கொள்ளையனிடம் தனக்கு தனியாக பேசவேண்டும் என நீண்ட, நெடிய சட்டப்போராட்டம் நடத்தி 15 நிமிடங்கள் அனுமதி பெற்றார் லலிதா ஜூவல்லரி ஓனர்.

அப்போது அவர், எனக்கு பல கிளைகள் இருக்கும்போது, திருச்சியில் திருட காரணம் என்ன? இந்த இடத்தில் துளைபோட்டால் நகை இருக்கும் இடத்துக்கு செல்லலாம் என எப்படித்தெரியும் என கேட்டார். அதற்கு குற்றவாளி நான் என்னோட வைபோட வந்துருக்கேன். அவ நகையை பார்த்துட்டு இருக்கும்போதே நான் எப்படி வரலாம்ன்னு நோட்டம் போட்ட்டேன்”என சொல்லியிருக்கிறார்.

உடனே லலிதா ஜூவல்லரி ஓனர், ஒகே...என்னோட குழப்பம் தீர்ந்துச்சு. என சொல்லிவிட்டு கொள்ளையனுக்கு தேங்ஸ் என சொல்லியிருக்கிறார். உடனே எனக்கு ஏன் நன்றி சொல்லுறீங்கன்னு கேட்டான் கொள்ளையன். அதற்கு லலிதா ஜூவல்லரி ஓனர் சொன்ன பதில்தான் அவரின் இன்றைய உயர்வுக்கும் காரணம்ன்னே சொல்லல்லாம். அவர் சொன்ன பதில் இதுதான்.

‘’எனக்கு திருடு போன நகை பத்தி கவலை இல்ல. அதுக்கு இன்சூரன்ஸ் செஞ்சுருக்கேன். அதைவிட அதிகமா சம்பாதிக்குற தைரியமும், தன்னம்பிக்கையும் எனக்கு இருக்கு. என்னோட சந்தேகமெல்லாம் இவ்வளவு பெரிய கடையில் காவலாளிகள் இருக்கும் இடத்தில் எப்படி துளைபோட்டு திருட தைரியம் வந்துச்சு? கடை ஊழியர்கள் யாரும் உதவி பண்ணுணாங்களா? என்பதுதான்.

ஒருவேளை என் வேலை பார்க்குறவன் திருடுற வரைக்கும் போறான்னா, அந்த ஊழியனோட பணத்தேவை எனக்கு ஏன் தெரியல? அவர்களை நான் சரியா கவனிச்சுக்கலைன்னு தானே அர்த்தம். அதை உடனே சரிசெய்யணும்ன்னு தான் கவலையா இருந்தேன். இபோ இனி அந்த கவலை இல்ல”என சொல்ல கொள்ளையன் முதல் காக்கிகள் மனம் வரை அந்த 15 நிமிடத்தில் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் லலிதா ஜூவல்லரி ஓனர்!

செம கிரேட்தான் சார் நீங்க!


நண்பர்களுடன் பகிர :