திருமணமாகி 7 வருடமாக குழந்தை இல்லை.. குழந்தைக்காக சாமியாரை நாடி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி..! Description: திருமணமாகி 7 வருடமாக குழந்தை இல்லை.. குழந்தைக்காக சாமியாரை நாடி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

திருமணமாகி 7 வருடமாக குழந்தை இல்லை.. குழந்தைக்காக சாமியாரை நாடி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி..!


திருமணமாகி 7 வருடமாக குழந்தை இல்லை.. குழந்தைக்காக சாமியாரை நாடி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

தமிழ்நாட்டை பொறுத்தவரை போலிச்சாமியார்களின் தொல்லை எப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.என்னதான் தொழில்நுட்பதில் மக்கள் முன்னேறினாலும் சாமியார்களால் ஏமாற்றப்படும் ஆண்களும் பெண்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அதுபோல ஒரு சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது.

சென்னையில் திருமணமாகி ஏழு வருடங்களாக குழந்தையில்லாத ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்க வழி சொல்வதாக கூறி மோசடி செய்த போலி சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள். தியாகராயநகரை சேர்ந்த செல்வி. இவரது மகள் வித்யாவுக்கு திருமணமாகி, 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

அப்போது செல்வியின் உறவினர் மாலதி என்பவர் அவருக்கு ஒரு சாமியாரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது அந்த சாமியார் வித்யாவிற்கு செய்வினை இருப்பதாகவும், அதை போக்கினால் உடனடியாக குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளார்.

செய்வினை போக்க 1 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளான் அந்த போலி சாமியார். அதற்காக ரூ 1 லட்சத்தை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வியும், வித்யாவும் வந்துள்ளனர். அங்கு வந்த போலி சாமியார், செல்வியிடம் ஒரு லட்ச ரூபாயினை பெற்று கொண்டு, பின்னர் செய்வினை நீக்க, பரிகாரம் செய்ய பொருட்கள் வேண்டும் என்றும், அதற்குரிய பொருள்கள் மற்றும் பலிக்காக கோழி ஆகியவற்றை வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

வெகுநேரம் காத்திருந்த இருவரும் அந்த சாமியார் வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இது குறித்து செல்வி பொலிசில் புகாரளித்தார்.அதன் பேரில் வழக்கு பதிந்த பொலிசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதோடு அந்த மோசடி சாமியாரை தேடி வருகிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :