15 வருடங்களுக்கு பின் கணவரோடு இணையும் பிரபல நடிகை... தீயாய் பரவும் தகவல்..! Description: 15 வருடங்களுக்கு பின் கணவரோடு இணையும் பிரபல நடிகை... தீயாய் பரவும் தகவல்..!

15 வருடங்களுக்கு பின் கணவரோடு இணையும் பிரபல நடிகை... தீயாய் பரவும் தகவல்..!


 15 வருடங்களுக்கு பின் கணவரோடு இணையும் பிரபல நடிகை... தீயாய் பரவும் தகவல்..!

பிரபல நடிகை ஒருவர் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கணவரோடு இணைகிறார். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழ்த்திரையுலகில் அறிமுகமே தேவையில்லை. கேப்டன் பிரபாகரன் படத்தில் அவர் நடிப்பு அப்போதே பேமஸ்.

சூப்பர் ஸ்டாருடன், படையப்பா படத்தில் நீலாம்பரி பாத்திரம் இப்போதும் அனைவரது கண்ணிலும் நிற்கும் பதிவு. அதிலும் படையப்பா வயசனாலும், உன் அழகும், ஸ்டைலும் இன்னும் உன்னைவிட்டு போகலைன்னு அவர் சொல்லும் மேனரிசம் அத்தனை பேமஸ்.

கடந்த 1983ல் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் உருவான வெள்ளை மனசு படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். 14 வயதில் அறிமுகமான இவர் தெலுங்கு திரையுலகில் கோலோச்சினார். தெலுங்கில் இருந்து, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் சேர்ந்து 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இதேபோல் பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா பாத்திரமும் வெகுவாக பேசப்பட்டது.

கடந்த 2003ல் ரம்யா கிருஷ்ணன், தெலுங்குப்பட இயக்குனர் கிருஷ்ணவம்சியை திருமணம் செய்தார். இந்நிலையில் 15 வருடங்களுக்கு பின்னர், தனது கணவர் இயக்கத்தில், ‘வந்தே மாதரம்’ என்னும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதளவாசிகள் இதைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :