கை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை..! Description: கை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை..!

கை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை..!


கை நிறைய சம்பளம்... உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க... உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை..!

பொறியியல் படித்துவிட்டு கைநிறைய சம்பளம் வாங்கிய சென்னைப்பெண், வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தில் இறங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், பாதிரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி தேன்மொழி. இந்த தம்பதியின் ஒரே மகள் குறிஞ்சிமலர். கடந்த 2018ல் சொந்த ஊரில் பொறியியல் முடித்துவிட்டு சென்னைக்கு போன குறிஞ்சி மலர் கைநிறைய சம்பளம் கிடைத்தபோதும், சொந்த ஊரில் பணிசெய்ய வேண்டும் என தரிசு நிலத்தை விளைநிலமாக்க முடிவு செய்தார். இதற்காக சொந்தக்காரர் ஒருவரின் தரிசு நிலத்தையும் தேர்வு செய்தார்.

உறவினரில் இரண்டரை ஏக்கரில் குறிஞ்சிமலர் 1500 தேக்கு மரங்கள் நட்டுள்ளார். அடுத்த ஆண்டே இதில் ஊடுபயிராக மிளகு செடியும் நட முடிவு செய்துள்ளார். குறிஞ்சிமலர் இதுபற்றி சொல்லும்போது, ‘’வேலைக்கு போகல. விவசாயம் செய்யப் போறேன்னு சொன்னதும், எல்லாரும் சிரிச்சாங்க. பிடெக் படிக்க அஞ்சு லட்சம் செலவு செஞ்சுருக்கோம். இனி கல்யாணம் பண்ணணும்ன்னா நல்ல வேலை வேணும்ன்னு சொன்னாங்க.

ஆனா நான் விவசாயம் செய்யதுல உறுதியா இருந்தேன். குமிழ் சந்திரசேகர்ன்னு ஒருத்தரு எனக்கு வழிகாட்டியா இருந்தாரு. அந்த அனுபவத்தில் வீட்டு பக்கத்திலேயே அவரை, பாகல், புடலை, பீர்க்கன், புளிச்சகீரை பயிர் சாகுபடி செஞ்சேன். அதிலேயே நல்ல மகசூல் வந்துச்சு. வரும் காலத்தில் முன்னோடி பெண் விவசாயியாக மாறுவதே ஆசை’’என நெகிழும் குறிஞ்சி மலர் சாப்ட்வேர் படித்துவிட்டு நிஜவேரை தேடி பயணிக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :