லாஸ்லியாவுடனான காதலுக்கு குட்பை சொன்ன கவின்? இருவருக்கும் என்ன தான் ஆச்சு? குழப்பத்தில் ரசிகர்கள்...! Description: லாஸ்லியாவுடனான காதலுக்கு குட்பை சொன்ன கவின்? இருவருக்கும் என்ன தான் ஆச்சு? குழப்பத்தில் ரசிகர்கள்...!

லாஸ்லியாவுடனான காதலுக்கு குட்பை சொன்ன கவின்? இருவருக்கும் என்ன தான் ஆச்சு? குழப்பத்தில் ரசிகர்கள்...!


லாஸ்லியாவுடனான காதலுக்கு குட்பை சொன்ன கவின்? இருவருக்கும் என்ன தான் ஆச்சு? குழப்பத்தில் ரசிகர்கள்...!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அனைவரும் கவனிக்கத்தக்க விசயமாக இருந்தது லாஸ்லியா_கவின் காதல் விவகாரம் தான்! பிக்பாஸ் சீசன் ஒன்றில் அனைவராலும் பெரிதாக பேசப்பட்ட ஓவியா_ஆரவ் காதலையே அது ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பேமஸ் ஆனது இந்த காதல்.

இந்நிலையில் லாஸ்லியாவுக்கும், கவினும் கல்யாணத்தை நடத்தியே தீருவது என கவிலியா ஆர்மியும் துவங்கினர் இருதரப்பு ரசிகர்கள். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்வை பலரும் பார்ப்பதற்கே இவர்கள்தான் காரணம் என நெட்டிசன்கள் சொல்லும் அளவுக்கு இருவரின் லவ்வும் கொடிகட்டிப் பறந்தது. பிக்பாஸ் கொடுத்த அஞ்சுலட்ச ரூபாய் ஆபரை ஏற்றுக்கொண்டு கவின் வெளியேறியபோதும், கண்ணீர் சிந்தி அழுதார் லாஸ்லியா.

கவினுக்காக லாஸ்லியாவின் வெற்றிக்கு அவரது ஆர்மியினர் கூட உழைத்தனர். இப்படியான சூழலில் லாஸ்லியா_கவின் ஜோடி பிரிந்துவிட்டதாகவும் பேச்சு ஓடுகிறது. அண்மையில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டட்திலும் கவினும், லாஸ்லியாவும் பேசிக்கொள்ளவே இல்லையாம். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் நடக்கிறது.

இதற்கான ரிகர்சல் காட்சிகளை பிக்பாஸ் பிரபலங்கள் தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இதில் கவின், லாஸ்லியாவின் முகத்தை கூட திரும்பி பார்க்கவில்லையாம். கொண்டாட்ட நிகழ்வில் சக பங்கேற்பாளர்களோடு போட்டோ எடுத்தபோதும் லாஸ்லியாவுடன் கவின் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கவின், லாஸ்லியாவை ஏன் புறக்கணிக்கிறார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து இருவரில் யாரேனும் வாய் திறப்பார்களா என காத்து கிடக்கின்றனது கவிலியா ஆர்மி!


நண்பர்களுடன் பகிர :