அடடே நம்ம ரகுவரன்_ரோகிணியின் மகனா இது? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..! Description: அடடே நம்ம ரகுவரன்_ரோகிணியின் மகனா இது? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..!

அடடே நம்ம ரகுவரன்_ரோகிணியின் மகனா இது? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..!


அடடே நம்ம ரகுவரன்_ரோகிணியின் மகனா இது?  இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..!

பாட்ஷா படத்தில் ரகுவரனின் நடிப்புக்கு ஈடாக எதையும் சொல்லிவிட முடியாது. பாட்ஷா சூப்பர் ஸ்டாருக்கு எப்படி பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதற்கு இணையாக அந்த பாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் ரகுவரன். அதேபோல் முதல்வர் படத்தில் அர்ஜூன் இண்டர்வியூ செய்யும் காட்சியில் ரகுவரன் நடிப்பு அசுரனாய் மிளிர்வார்.

அமர்க்களம் படத்திலும் அஜித் உடன் நடித்தவர். இவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர். 1982ல் அம்மா என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். தமிழில் ஏழாவது மனிதன் இவரது முதல்படம். அதிலும் அந்த படத்தில் ஹீரோவாகவே அறிமுகம் ஆனார். அதன் பின்னர் துணை பாத்திரங்களில் தலைகாட்டிய ரகுவரன் ஒருகட்டத்தில் பிசியான வில்லனாக நடிக்கத் துவங்கினார். இதனிடையே 1996ல் நடிகை ரோகிணியோடு திருமணம் நடந்தது.

1975 முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த ரோகிணியும், ஒருகட்டத்தில் ஹீரோயினாகவும், துணை நடிகையாகவும் வலம்வந்தவர். இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது. அதில் இருந்து ஆறே ஆண்டுகளில் கருத்து வேற்றுமையால் தம்பதிகள் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் ரகுவரன்_ரோகிணி தம்பதியின் மகன் ரிஷிவரனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் சூப்பர் ஸ்டாருடன், தன் அம்மா ரோகிணியோடு நிற்கிறார் ரிஷிவரன். குறித்த அந்த படம் இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :