கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் திருமணம் நடத்தியே ஆக வேண்டும்.. களத்தில் இறங்கியது யார்ன்னு பாருங்க..! Description: கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் திருமணம் நடத்தியே ஆக வேண்டும்.. களத்தில் இறங்கியது யார்ன்னு பாருங்க..!

கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் திருமணம் நடத்தியே ஆக வேண்டும்.. களத்தில் இறங்கியது யார்ன்னு பாருங்க..!


கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் திருமணம் நடத்தியே ஆக வேண்டும்.. களத்தில் இறங்கியது யார்ன்னு பாருங்க..!

பிக்பாஸ் சீசன் 3ல் அனைத்து மனங்களையும் கவர்ந்தது லாஸ்லியா_கவின் காதல் விவகாரம்தான். தனித்தனியே இருவர் நடவடிக்கையிலும் பிக்பாஸ் வீட்டில் பல விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு காதல் ஜோடியாக இருவருமே நெஞ்சை நிறைத்தவர்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சீக்கிரமே கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என களத்தில் குதித்துள்ளனர் கவின்லியா ஆர்மியினர். இப்படி இருதரப்பு ரசிகர்களும் சேர்ந்து ஒரு ஆர்மியையும் உருவாக்கி இருக்கின்றனர். கவின், பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ஆபரை ஏற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய போது லாஸ்லியா அழுததைப் பார்த்து கண்ணீர் சிந்தியது இருதரப்பு ஆர்மிகளும் தான். கவின் ஆர்மியும், லாஸ்லியாவுக்கு தட்டிவிட்ட வாக்குகளால் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

பைலன்சுக்கு முன்பு கவின் பிக்பாஸ் வீட்டுக்கு போன போதுகூட, வீட்ல என்ன சொன்னாங்க? பிரண்ட்ஸ் என்ன சொன்னாங்க என தன் காதல் குறித்த நிலைப்பாட்டை தெரியவே லாஸ்லியா ஆர்வம் காட்டினார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே எதையாவது கவினிடம் பேசிவிட்டு மீதியை வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் எனச் சொல்லும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போனபின்பு இருவரும் சந்திக்கவே இல்லாமல் இருந்து வருகின்றனர்.

இப்போது களத்தில் இறங்கி இருக்கும் கவின்லியா ஆர்மி, பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் இடையே நடந்த சுவாரஸ்ய மொமொண்ட்களை தொகுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது. கூடவே அதில் கோரிக்கையும் வைத்திருக்கிறது. அதில், ‘’கவினையும், லாஸ்லியாவையும் அறிமுகம் செய்ய வைத்து பிக்பாஸ் தான். அதேபோ, அவரே இருவருக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும்.”என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனிடமும் தமிழகத்து அம்மாக்கள் சார்பில் பெண் கேட்கத் தயார் என கூறப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :