பிக்பாஸ் புண்ணியத்தில் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம்... நெகிழ்ச்சியில் சேரன் ரசிகர்கள்..! Description: பிக்பாஸ் புண்ணியத்தில் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம்... நெகிழ்ச்சியில் சேரன் ரசிகர்கள்..!

பிக்பாஸ் புண்ணியத்தில் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம்... நெகிழ்ச்சியில் சேரன் ரசிகர்கள்..!


பிக்பாஸ் புண்ணியத்தில் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம்... நெகிழ்ச்சியில் சேரன் ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 3ல் அனைவராலும் விரும்பத்தக்க நபராக இருந்தவர் சேரன். அதிலும் லாஸ்லியாவிடம் இவர் காட்டிய வெள்ளந்தியான தந்தை பாசம், வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்ஸிடம் இவர் மூத்தவராகவும், பொறுப்பாகவும் நடந்து கொண்டவிதம் ஆகியவை சேரனை பிக்பாஸ் பார்த்த அனைவருக்கும் பிடிக்க வைத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் புண்ணியத்தால் சேரனின் படம் ஒன்று பீக்கிற்கு வந்துள்ளது. ராஜாவுக்கு செக் என்னும் பட இசை வெளியீட்டுவிழா இன்று நடந்தது. இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டு ஏப்ரலிலேயே வந்துவிட்டது. ஆனால் அப்போது பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இப்போது சேரனுக்கு கிடைத்துள்ள வரவேற்பையும், ஆதரவையும் பயன்படுத்திக் கொள்ள ட்ரெய்லரை மீண்டும் வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த படம் திரில்லர், ஆக்‌ஷன், காமெடி, எமோஷனல் கலந்து இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் படம் குறித்து சேரனும் ட்விட் செய்துள்ளார். அதில் அவர் ‘’தந்தை மகள் மீது காட்டும் பாசத்திற்கு அளவு ஏதும் இல்லை.

அந்த பாசத்தை காலங்கள்தான் சொல்லும். எது உண்மையான பாசம்? எவ்வளவு ஆழமான பாசம்? என்பது என! அதே சமயத்தில் இந்த ராஜாவுக்கு செக் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்திருக்கும் என் நண்பர்கள் அமீர், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம், சரண் ஆகிய அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்’’ என கூறியிருந்தார்.

லாஸ்லியா_சேரன் விவலாரத்தையும் இந்த ட்விட்டில் அவர் கூறியிருக்கிறார். சேரனின் பதிவால் அவரை பெரியதிரையில் காணும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.


நண்பர்களுடன் பகிர :