சுடுகாடு போகும்போது திடீரென தலையை அசைத்த சடலம்.. அதன்பின் நடந்த அதிசயம்..! Description: சுடுகாடு போகும்போது திடீரென தலையை அசைத்த சடலம்.. அதன்பின் நடந்த அதிசயம்..!

சுடுகாடு போகும்போது திடீரென தலையை அசைத்த சடலம்.. அதன்பின் நடந்த அதிசயம்..!


சுடுகாடு போகும்போது திடீரென தலையை அசைத்த சடலம்.. அதன்பின் நடந்த அதிசயம்..!

புலி தாக்கி பிழைத்தவரும் உண்டு. புல் தடுக்கி விழுந்து செத்தவரும் உண்டு என பழமொழி உண்டு. அது அப்படியே நிஜமாகியுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஒடிசா மாநிலத்தில் கபகல்லா கிராமத்தை சேர்ந்தவர் சிமானச் மாலிக். விவசாயியான இவர், வழக்கம் போல் தன் ஆடு, மாடுகளை அழைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள காட்டுக்கு மேய்ச்சலுக்கு போயிருக்கிறார்.

ஆனால் மாலையில் கால்நடைகள் வீடு திரும்பியும் மாலிக் மட்டும் வரவில்லை. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் காட்டுக்குள் போய் தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்தார் மாலிக்.

இதைப் பார்த்து அவர் இறந்து விட்டதாக நினைத்துக்கொண்ட அவரது உறவினர்கள் மாலிக்கை அடக்கம் செய்ய முடிவு எடுத்தனர். அவருக்கு அடக்கத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டு தகன மேடைக்கு மாலிக்கை தூக்கிப் போயினர். அப்போது அவர் திடீரென தலையை அசைக்க, முதலில் ஷாக்காகினர் உறவினர்கள்.

தொடர்ந்து அவரை அதே பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திக்கு கூட்டிப் போனார்கள். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் உயிர் இருப்பதை பார்த்துவிட்டு சிகிட்சையளித்து காப்பாற்றினார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :