சந்தோசத்தை கெடுத்து சாகடித்த சந்தேகம்: இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..!

சந்தேகம் என்பது கொடூரமான அரக்கன். அது எப்போது யாரைப் பற்றிக் கொல்லும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியான ஒரு சந்தேகத்தால் இளம்பெண் ஒருவர் தன் உயிரையே விட்டுள்ளார். அதுவும் அரசுப்பணியில் இருக்கும் அந்த பெண்ணின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்க்குடி பக்கத்தில் நீலாமங்கலம் வெற்றாங்கரை ஊராட்சி உள்ளது. இங்குள்ள சுமதியின் மகள் ப்ரீத்தி. சுமதியின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, ப்ரீத்தியை சுமதி தனியாளாகவே வளர்த்தார். பொறியியல் படித்துள்ள ப்ரீத்தி, அண்மையில் நடந்த தபால்துறை தேர்விலும் ஜெயித்து, அஞ்சல் ஊழியராக பணி செய்துவந்தார்.

இதற்காக தனது தாத்தா தங்கையன் வீட்டில் தங்கியிருந்த ப்ரீத்தி, தன்னோடு கல்லூரியில் படித்தவர்களை பார்த்து வருவதாகச்சொல்லி, கோவைக்கு சென்றார். இந்நிலையில் வீடு திரும்பியவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்,பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தார் ப்ரீத்தி.

இதற்கான காரணம் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அதில் ப்ரீத்தி முன்பு காதலனுடன் அடிக்கடி போனில் பேசியுள்ளார். ஆனால் இப்போது, தபால் துறை வேலையில் இருந்ததால் அடிக்கடி பேச முடியவில்லை. இதேபோல் கோவை வந்ததும் ஒரு லாட்ஜில் தங்கச்சொல்லி காதலன் சொல்லியிருக்கிறார். ஆனால் ப்ரீத்தி அங்கு தங்காமல் வேறு ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு ப்ரீத்தியின் காதலர், அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்துள்ளார். இதை பொறுத்து கொள்ள முடியாமல் உயிரை விட்டுள்ளார் ப்ரீத்தி.