சீன அதிபரை மோடி சந்தித்தபோது கூடவே இருந்த அதிகாரி யார் தெரியுமா? அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் இதுதான்..! Description: சீன அதிபரை மோடி சந்தித்தபோது கூடவே இருந்த அதிகாரி யார் தெரியுமா? அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் இதுதான்..!

சீன அதிபரை மோடி சந்தித்தபோது கூடவே இருந்த அதிகாரி யார் தெரியுமா? அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் இதுதான்..!


சீன அதிபரை மோடி சந்தித்தபோது கூடவே இருந்த அதிகாரி யார் தெரியுமா? அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் இதுதான்..!

சீன அதிபர் ஜின்பிங் உடன், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசும் முக்கிய நிகழ்வு, மகாபலிபுரத்தில் நேற்றும், இன்றும் நடந்து வருகிறது. இருநாட்டு தலைவர்கள் பேசும் இந்த நிகழ்வை உலகநாடுகள் அனைத்தும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. இதில் இவர்களோடு இரண்டு அதிகாரிகள் கூடவே இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சீனநாட்டுக்காரர். மற்றொருவர் நம் இந்தியாவை சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும் மொழிபெயர்ப்புக்காக அவர்களோடே இருந்தார்கள்.இந்தியாவின் சார்பில் அங்கு இருந்த அதிகாரியின் பெயர் மதுசுதன் மகாபலிபுரத்தின் தொன்மம், சிறப்புகளை மோடி விளக்க அவற்றையெல்லாம் சீன அதிபரிடம் மதுசுதன் தான் விளக்கிச் சொன்னார். சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் பொறியியல் படித்த மதுசுதன், 2007ல் ஐ.எப்.எஸ் அதிகாரியாக தேர்வானார். இவர் ட்ரெய்னிங் முடிந்ததுமே 2009 முதல் 2011வரை சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலை செயலாளராகவே இருந்தார்.

பின்னர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரத்தில் இரண்டாம் நிலை செயலாளராக இரண்சு வருடங்கள் பணி செய்தார். 2013ல் மீண்டும் சீனாவுக்கு முதல்நிலை செயலாளராக மாற்றப்பட்டார்.

மாண்ட்ரின் எனப்படும்,சீனாவின் அதிகாரப்பூர்வ் மொழியும் மதுசுதனுக்கு அத்துப்புடி. கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா போனபோதும் மதுசுதனே மொழிபெயர்ப்பு செய்தார். ஏற்கனவே 2014ல் சீன அதிபர் இந்தியா வந்தபோதும், மதுசுதனே மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :