பிக்பாஸ் இறுதிநாளில் கலந்து கொள்ளாதது ஏன்? செம காண்டாக பதில் சொன்ன சித்தப்பு சரவணன்.. என்ன சொன்னார் தெரியுமா? Description: பிக்பாஸ் இறுதிநாளில் கலந்து கொள்ளாதது ஏன்? செம காண்டாக பதில் சொன்ன சித்தப்பு சரவணன்.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் இறுதிநாளில் கலந்து கொள்ளாதது ஏன்? செம காண்டாக பதில் சொன்ன சித்தப்பு சரவணன்.. என்ன சொன்னார் தெரியுமா?


பிக்பாஸ் இறுதிநாளில் கலந்து கொள்ளாதது ஏன்? செம காண்டாக பதில் சொன்ன சித்தப்பு சரவணன்.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 மிகவும் உற்சாகமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசன் சர்ச்சைகளுக்கு துளியும் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் ஆரம்பத்தில் அதிக சர்ச்சையில் சிக்கிய நபராக இருந்தார் சரவணன். ஆனால் சரவணன் பிக்பாஸ் இறுதி நாளன்று நடந்த பினாலேக்கு கூட வரவில்லை. இதுகுறித்து முதன்முதலாக அவர் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

1980 காலக்கட்டங்களில் தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சரவணன். அதன் பின்னர் போதிய வாய்ப்பு இல்லாமல் இருந்தவருக்கு பருத்திவீரனில் வாய்த்த சித்தப்பு பாத்திரம் சினிமாவுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்தது. அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்குபோனவருக்கு அங்கும் சித்தப்பு என்றே மரியாதை கிடைத்தது. ஆனால் சேரனை ஒருமையில் திட்டி சர்ச்சையில் சிக்கினார்.

இதேபோல் தவறான நோக்கத்தோடு, பெண்களை இடிப்பதற்காகவே பஸ்ஸில் போயிருக்கிறேன் என இவர் கூறியதும் சர்ச்சையானது. பிக்பாஸில் இருந்து வெளியேறியவர்களை சிறப்பு விருந்தினர்களாக வீட்டுக்கு அனுப்பி வைத்தது விஜய் டிவி. ஆனால் அப்படிக்கூட மதுமிதாவும், சரவணனும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை. இதேபோல் இவர்கள் இருவரும் பினாலே நிகழ்ச்சிக்கும் செல்லவில்லை.

இதுகுறித்து சித்தப்பு சரவணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘’பைனலில் கலந்துக்காதது எனக்கு ஒரு விசயமே இல்லை. பிக்பாஸ் பத்தி எங்கையும், எதையும் பேசக்கூடாதுன்னு உறுதியா இருக்கேன். பிக்பாஸ் நிகழ்ச்சியை தாண்டி, லைப்ல நிறைய விசயங்கள் இருக்கு. நான் இப்போ தேனியில் மருத படத்தின் படப்பிடிப்புல இருக்கேன். கிழக்கு சீமையிலே மாதிரி இதுவும் அண்ணன், தங்கச்சி பாசக்கதை. இதில் நானும், ராதிகாவும் அண்ணன் தங்கச்சியா நடிக்கோம்.”என சொல்லியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :