கைவிட்ட உறவினர்கள்... நடிகர் வடிவேலு செய்த பேருதவி.. மாரடைப்பால் இறந்த நடிகருக்கு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா? Description: கைவிட்ட உறவினர்கள்... நடிகர் வடிவேலு செய்த பேருதவி.. மாரடைப்பால் இறந்த நடிகருக்கு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா?

கைவிட்ட உறவினர்கள்... நடிகர் வடிவேலு செய்த பேருதவி.. மாரடைப்பால் இறந்த நடிகருக்கு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா?


கைவிட்ட உறவினர்கள்...  நடிகர் வடிவேலு செய்த பேருதவி..   மாரடைப்பால் இறந்த நடிகருக்கு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா?

எஸ்கியூஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்கு சொல்ல முடியுமா என்ற நகைச்சுவை காட்சியின் மூலம் தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மாரடைப்பால் காலமானது கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர் சினிமா வாய்ப்பு 17 வயதிலேயே சென்னைக்கு சென்றார். வாய்ப்பு கிடைக்காமல் அலைத்தவர் ஒரு கட்டத்தில் சினிமா கம்பெனி,விளம்பர நிறுவனங்களில் ப்ரோடுக்ஷன் மேனேஜராக வேலையில் சேர்ந்தார்.

ஒரு கட்டத்தில் நடிக்கவும் துவங்கினார். தவசி,சாணக்யா, எல்லாம் அவன் செயல் உட்பட பல திரைப்படங்களில் வடிவேலுவோடு இவர் செய்த காமெடி காட்சிகள் நல்ல ரீச் ஆகின.

கடந்த 2008 ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்திக்கு காலில் ஆபரேசன் நடந்துள்ளது. அந்த முழு செலவையும் வடிவேலுதான் ஏற்றுக்கொண்டார்.

இதை நினைத்து கிருஷ்ணமூர்த்தி உருக,எனக்கொரு அண்ணன் இருந்தா செய்ய மாட்டேனா? என பதில் கேள்வி கேட்டிருக்கிறார் வடிவேலு. இப்போது தன் மூத்த அண்ணனையே இழந்தது போல வருத்ததில் உள்ளார் வடிவேலு.


நண்பர்களுடன் பகிர :