பிக்பாஸ் முகின் பற்றி உங்ளுக்கு இதெல்லாம் தெரியுமா? இவர் மலேசியாவில் பேமஸானது இப்படித்தான்..! பலரும் அறியாத உண்மை தகவல்..! Description: பிக்பாஸ் முகின் பற்றி உங்ளுக்கு இதெல்லாம் தெரியுமா? இவர் மலேசியாவில் பேமஸானது இப்படித்தான்..! பலரும் அறியாத உண்மை தகவல்..!

பிக்பாஸ் முகின் பற்றி உங்ளுக்கு இதெல்லாம் தெரியுமா? இவர் மலேசியாவில் பேமஸானது இப்படித்தான்..! பலரும் அறியாத உண்மை தகவல்..!


 பிக்பாஸ் முகின் பற்றி உங்ளுக்கு இதெல்லாம் தெரியுமா?   இவர் மலேசியாவில் பேமஸானது இப்படித்தான்..! பலரும் அறியாத உண்மை தகவல்..!

பிக்பாஸ் 3 போட்டியில் வெற்றி பெற்று புகழின் உச்சத்துக்கு போயிருக்கிறார் முகின். துவக்கத்தில் பெரிதாக சோபிக்காமல் தெரிந்த முகின், ஒருகட்டத்தில் அனைவரும் கவனிக்கும் நபராக மாறினார். கமலஹாசனே அவர் நேர்மையாக விளையாடுவதாக பாராட்டியிருந்தார்.

முகினின் பெற்றோருக்கு அவரை காவல்துறை பணியில் சேர்க்க வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் முகினுக்கோ இசையில் தான் அலாதி ஆர்வமாம். அவரது தந்தையான பிரகாஷ் ராவ் மேடை நாடக நடிகராகவும், நல்லபாடகராவும் இருந்ததால் முகினுக்கு அத்துறையில் இயல்பிலேயே ஆர்வம் வந்தது.

13 வயதிலேயே பாடல் எழுதத் துவங்கிவிட்ட முகின். பல இரவுகள் தூங்காமல் பாடல் எழுதியுள்ளார். மலேசியாவில் ஊடகம். தொலைக்கட்சிகளுக்கு அப்பால் தன் யூடியூப் பக்கம் மூலமே பேமஸாகி இருக்கிறார் முகின். அதில் சுவாரஸ்ய காணொளிப் பதிவுகள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் மூலம் மலேசியாவில் பேமஸானார் முகின். அவரது பாப் பாடல்களுக்கு அங்கு பெரும் ரசிகர் படையுண்டு. முகேனுக்கு கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அடுத்தடுத்து மலேசியப் படங்களில் ஒப்பந்தமாகும் வாய்ப்பு அதிகம் என்றும் சொல்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த முகின் சின்ன வயதிலேயே பெற்றோரை கஷ்டப்படுத்தக் கூடாதென தன் தேவைகளை சுருக்கிக் கொண்டவர். பழைய பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து கடையில் போட்டு அதில் கிடைக்கும் காசைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதாகவும், கால் டாக்சி ஓட்டியதாகவும் முகின் குறித்து நினைவு கூறுகிறார் அவரது நண்பர் பாஸ்கரன்.

தன் பால்யத்தில் பல கஷ்டங்களை சந்தித்த முகினுக்கு, பிக்பாஸ் வெற்றி வசந்த வாசலை திறந்து வைத்திருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :