நான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அனாதையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி..! Description: நான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அனாதையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி..!

நான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அனாதையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி..!


நான்குபிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஒன்னும் இல்லை... தாயை அனாதையாக்கிய மகன்... நெஞ்சை உருக்கும் செய்தி..!

‘’தென்னைய நட்டா இளநீரு...பிள்ளைய பெத்தா கண்ணீரு’’என கிராமப்பகுதிகளில் சொல்லும் சொலவடை, பலநேரங்களில் நிஜத்திலும் அப்படியே நடந்து வருகிறது. குழந்தைகளை பெற்றும் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் வளர்ந்த பின்னர் சரியாகக்கூட பார்க்காமல் இருப்பது பல இடங்களிலும் அவ்வப்போது நடந்து வருகிறது.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் செங்கந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பட்டம்மாள் பாட்டி இந்த பாட்டிக்கு 95 வயது ஆகிறது. இவருக்கு சண்முகம், சதாசிவம் என்ற இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இதில் சதாசிவம் ஓய்வுபெற்ற ஆசிரியராகவும், சண்முகம் ஸ்வீட்கடையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இருபிள்ளைகள் இருந்தும் இவர்கள் இருவரும் பட்டம்மாளை சரியாகக் கவனிக்கவில்லை. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருத்தர், பட்டம்மாளை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார். அங்கு இருந்து பாசமிகுதியில் தன் மகன்கள் இருவரது வீட்டுக்கும் சென்று இருக்கிறார் பட்டம்மாள்.

ஆனால் இருவரும் அவரை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் மகள் வீட்டுக்குப் போனார். அங்கு சிலகாலம் வைத்திருந்த மகள் மீண்டும் அவரை, சண்முகம் வீட்டுத் திண்ணையில் விட்டுவிட்டு போய்விட்டார். சண்முகம் உடனே, பட்டம்மாளை சதாசிவம் வீட்டுத் திண்ணையில் விட்டுவிட்டு போய்விட்டார். அவரோ தாயை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட, அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலஸ்க்கு போன் செய்து, ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

பெற்றதாயை பராமரிக்காமல் சாலையில் விட்ட பிள்ளைகள் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :