இறந்ததாக கைவிரித்த மருத்துவர்.. சவப்பெட்டியிலேயே சமாதியான குழந்தை! நெஞ்சை உருகவைக்கும் சோகக்கதை..! Description: இறந்ததாக கைவிரித்த மருத்துவர்.. சவப்பெட்டியிலேயே சமாதியான குழந்தை! நெஞ்சை உருகவைக்கும் சோகக்கதை..!

இறந்ததாக கைவிரித்த மருத்துவர்.. சவப்பெட்டியிலேயே சமாதியான குழந்தை! நெஞ்சை உருகவைக்கும் சோகக்கதை..!


இறந்ததாக கைவிரித்த மருத்துவர்.. சவப்பெட்டியிலேயே சமாதியான குழந்தை! நெஞ்சை உருகவைக்கும் சோகக்கதை..!

மரணம் மிக சோகமானது. அதிலும் பிஞ்சுக் குழந்தைகளின் மரணம் அளவிட முடியாத துயரமானது. அந்த வகையில் உயிரோடு இருந்த ஒரு குழந்தையை மருத்துவர் இறந்ததாகச் சொல்லிவிட சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்த பின்னர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தஞ்சாவூரை அடுத்த வயலூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி ப்ரீத்தி. இந்த தம்பதிக்கு கெவின் என்ற பெயரில் ஒருவயதேயான குழந்தை இருந்தது. கெவினுக்கு காய்ச்சல் காரணமாக தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற குழந்தையின் பெற்றோர் சொந்த ஊருக்கு எடுத்து வந்து சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முயற்சித்தனர். அப்போது சவப்பெட்டியில் லேசான அசைவு தெரிந்தது. உடனே பெற்றோர் சவப்பெட்டியில் இருந்த குழந்தையை எடுத்துகொண்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு ஓடினர். குழந்தையை சோதித்த மருத்துவர்கள் ஆஸ்பத்திருக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் உயிர்போயிருப்பதாக தெரிவித்தனர்.

குழந்தை உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னதால்தான் குழந்தையை பெற்றோர் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிர் இழந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :