விஜய் ரசிகரை மிரட்டி எச்சரித்த திரையரங்கம்.. ஏன் தெரியுமா? பவுன்சர்களை காட்டி மிரட்டிய பிகில் பயங்கரம்...! Description: விஜய் ரசிகரை மிரட்டி எச்சரித்த திரையரங்கம்.. ஏன் தெரியுமா? பவுன்சர்களை காட்டி மிரட்டிய பிகில் பயங்கரம்...!

விஜய் ரசிகரை மிரட்டி எச்சரித்த திரையரங்கம்.. ஏன் தெரியுமா? பவுன்சர்களை காட்டி மிரட்டிய பிகில் பயங்கரம்...!


விஜய் ரசிகரை மிரட்டி எச்சரித்த திரையரங்கம்.. ஏன் தெரியுமா? பவுன்சர்களை காட்டி மிரட்டிய பிகில் பயங்கரம்...!

விஜய் ரசிகர் ஒருவர் தியேட்டர் நிர்வாகிகளை நக்கலுக்கு மிரட்ட பதிலுக்கு அவரை கெத்தாக எச்சரித்திருக்கிறது திரையரங்கம். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிகில். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பாடல்களும் இப்போதே சூப்பர், டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதிலும் ஆடியோ லாஞ்சில் விஜய் பேசிய வசனங்களும் படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரால் விஜய் ரசிகர்கள் தாக்கப்பட அதுவும் சர்ச்சையானது.

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு வெள்ளித்திரைக்கு வரும் பிகில் படத்தின் ‘வெறித்தனம்’ பாடலை நெல்லை ராம் முத்துராம் தியேட்டர் ஒளிபரப்பியது. இது விஜய் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த வீடீயோவை தியேட்டர் தரப்பு ட்விட்டரில் வெளியிட்டு இருந்தது.

அதில் கமெண்ட் செய்திருந்த விஜய் ரசிகர் ஒருவர், ‘’முதல் நாள் முதல் சோ அன்று ஸ்கிரீன் பத்திரம். ஏதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல..”என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு நெல்லை ராம் முத்துராம் தியேட்டர் தரப்பும் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. அதில்’ சகோதரரே நீங்கள் அனைவரும் கொண்டாடணும்ன்னு நாங்க நினைக்கிறோம். ஆனால் நீங்கள் நகைச்சுவையாக உரிமையாளரிடம் இப்படி நேரடியாக சொல்வது சரியில்லை.

. நீங்கள் பொறுப்பற்ற முறையில் கூறினால், நானும் அதையே கூறுவேன். உங்களுக்கு ஏதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல. கொண்டாடும் போது கவனமாக இருங்கள்’ என பதிவிட்டுள்ள தியேட்டர் தரப்பு அதில் பவுன்சர்கள் படத்தையும் போட்டுள்ளது.

அட திருநெல்வேலி தியேட்டர்ன்னா சும்மாவா?


நண்பர்களுடன் பகிர :