தல அஜித் பற்றி நடிகர் சிரஞ்சீவி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? கொண்டாடும் தல ரசிகர்கள்..! Description: தல அஜித் பற்றி நடிகர் சிரஞ்சீவி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? கொண்டாடும் தல ரசிகர்கள்..!

தல அஜித் பற்றி நடிகர் சிரஞ்சீவி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? கொண்டாடும் தல ரசிகர்கள்..!


தல அஜித் பற்றி நடிகர் சிரஞ்சீவி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? கொண்டாடும் தல ரசிகர்கள்..!

தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் அண்மையில் தல அல்டிமேட் ஸ்டார் அஜித்தைப் பற்றி சொன்ன ஒரு விசயத்தை கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

மழை வந்தால் மயில் ஆடும். தல படம் வந்தால் தமிழ்நாடே ஆடும் என புதுமொழி சொல்லும் அளவுக்கு திரளான ரசிகர்களை கொண்டிருக்கிறார் அஜித்குமார்.

தன் ரசிகர் மன்றங்களை கலைத்து, தன் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் முன்பு பிளக்ஸ் போர்ட் வைக்க வேண்டாம் எனவும் சொன்னவர் அஜித். ஆனாலும் அவர் மீது உள்ள பாசத்தால் ரசிகர்கள் பிளக்ஸ் வைத்து அவர் பட ரீலீஸ்க்கு கொண்டாடி தீர்க்கின்றனர்.

தெலுங்கு பட உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிப்பில் உருவாகியுள்ள ‘’சைரா நரசிம்ம ரெட்டி’’ படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பான ப்ரோமோஷனில் இருந்தவர் தல அஜித் குறித்தும் பேசியிருக்கிறார். ‘’சமீபத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்னை மிகவும் கவர்ந்தது. பிங்க் ப்டத்துக்கும் இதுக்கும் சின்ன வித்யாசங்கள் இருந்ததும் என்னை கவர்ந்துச்சு.

அஜித் நடித்த வேதாளம், விஸ்வாசம் படங்களையும் பார்த்தேன். அஜித்தின் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் அரசியல் கலப்பே இல்லாமல் சிறப்பான படங்களை தேர்வு செய்து, நடிக்கும் அஜித்தின் திறமை என்னை கவர்ந்துள்ளது. இன்னிக்கு பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டிருக்கும் அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகத்தை க்ளாப் போர்டு அடித்து தவங்கி வைத்தது பெருமையாக உணருகிறேன்.”என சொல்லியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :