பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன்..ஷாக்காகி சேரன் போட்ட ட்விட்! Description: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன்..ஷாக்காகி சேரன் போட்ட ட்விட்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன்..ஷாக்காகி சேரன் போட்ட ட்விட்!


பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன்..ஷாக்காகி சேரன் போட்ட ட்விட்!

பிக்பாஸ் சீசன் மூன்று முதல் இரு சீசன்களைப் போலவே ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதிலும் முதல் இரு சீசன்களைவிட இப்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிக சர்ச்சையிலும் இந்த சீசனில் சிக்கினார்கள்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் தான் உண்டு, தன் வேலை உண்டு என மிகவும் சிறப்பாக விளையாடியவர் ஈழ்த்தை சேர்ந்த தர்ஷன். இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் தான் வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணன் தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த சேரனும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘’ஆகச்சிறந்த உழைப்பைக் கொடுத்து விளையாடிய தம்பி தர்ஷன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்துக்கு உரியது.

100 சதவிகிதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும், பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும், முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்...அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. ‘என்று சேரன் பதிவிட்டு உருகியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :