ரயிலில் அடிபட்டு பலியான யானை.. மனதை உருகவைக்கும் வீடீயோ மரணத்தின் விளிம்பில்கூட யானை செஞ்ச சேவையை பாருங்க..! Description: ரயிலில் அடிபட்டு பலியான யானை.. மனதை உருகவைக்கும் வீடீயோ மரணத்தின் விளிம்பில்கூட யானை செஞ்ச சேவையை பாருங்க..!

ரயிலில் அடிபட்டு பலியான யானை.. மனதை உருகவைக்கும் வீடீயோ மரணத்தின் விளிம்பில்கூட யானை செஞ்ச சேவையை பாருங்க..!


ரயிலில் அடிபட்டு பலியான யானை.. மனதை உருகவைக்கும் வீடீயோ மரணத்தின் விளிம்பில்கூட யானை செஞ்ச சேவையை பாருங்க..!

மொத்த சோசியல் மீடியாவும் அந்த யானைக்காக உருகுகிறது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி அந்த யானை தவிக்கும் வீடியோ அனைவரையும் உருக வைத்துள்ளது. இப்போது அதைவிட அதிர்ச்சியாக அந்த யானை உயிர் இழந்துவிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தின் பனார்ஹட்_நக்ராகடா வழிதடத்தின் இண்டர்சிட்டி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த ரயில் தண்டவாளத்தை காலை 8.10க்கு யானை ஒன்று கடக்க முயன்றது. இதில் அப்போது வந்த இண்டர்சிட்டி ரயில் யானை மீது மோதியது. இதில் அந்த யானை அடிபட்ட வேகத்தில் ரயில் இஞ்சினில் 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது.

அப்போது யானையின் உடல் முழுவதும் காயம்பட்டு ரத்தம் வடிந்தது. அதனால் எழுந்திருக்கக் கூட முடியவில்லை. அந்த நிலையிலும் யானை மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென மிகவும் கஷ்டப்பட்டு நகர்ந்து தண்டவாளத்தில் இருந்து காட்டுக்குள் புகுகிறது. இது அந்த ரயிலில் வந்த பயணிகளின் செல்போன் வீடியோவில் பதிவாகி உருக வைக்கிறது.

யானை மீது மோதிய வேகத்தில் ரயில் இஞ்சினும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இது யானைகள் உலாவும் பகுதி என்பதால் கடந்த 2015ம் ஆண்டுவாக்கில் இங்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் தான் ரயில்களை ஓட்ட வேண்டும் என விதி போட்டனர். ஆனால் விபத்துகள் குறைந்ததால் மீண்டும் 50 கிலோ மீட்டர் வரை ஓட அனுமதித்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :