பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின்.. யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, காமெடிநடிகர் சதீஷ் சொன்னது இதுதான்...! Description: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின்.. யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, காமெடிநடிகர் சதீஷ் சொன்னது இதுதான்...!

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின்.. யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, காமெடிநடிகர் சதீஷ் சொன்னது இதுதான்...!


பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின்.. யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, காமெடிநடிகர் சதீஷ் சொன்னது இதுதான்...!

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறு,விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் கொடுத்த ஆபரை ஏற்றுக்கொண்டு 5 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று நடையைக் கட்டினார் கவின்.

ஆனால் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் லாஸ்லியாவும், சாண்டியும் கதறி அழுதனர். அவர்கள் கவினை எவ்வளவோ சமாதானம் சொல்லி தடுத்துப்பார்த்தும் அவர் கேட்கவில்லை. இதனால் கவின் ஆர்மியும் சோர்ந்து போயுள்ளனர்.

இந்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் இதுகுறித்து தங்கள் சோசியல் மீடியாக்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’’கவின் வெளியே செல்வது அனைவருக்கும் வருத்தமான செயல்” என குறிப்பிட்டுள்ளார். பிரபல காமெடி நடிகர் சதீஷ், ‘’ஏன் போனாப்டி...தயவு செஞ்சு புரிஞ்சவங்க விளக்குங்க...’’ன்னு பதிவிட்டு இருக்கிறார்.

இதேபோல் கடந்த சீசனில் விளையாடிய ஐஸ்வர்யா தத்தா, கவின் வெளியேறியது உண்மையில் வருத்தமாக இருக்கிறது. கடவுள் அவருக்கு எல்லா வலிமையும், சக்தியும் கொடுக்கட்டும்”எனக் கூறியுள்ளார். இதேபோல் பிக்பாஸ் வீட்டில் சகபோட்டியாளராக இருக்கும் சாண்டியின் மனைவி, ஏண்டா தம்பி..இப்படி பண்ணுறன்னு போட்டிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :